இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2
இஸ்லாமிய கேள்வி பதில் ..!!!
பாகம் : 2

குர்ஆனைபற்றி தெரிந்து கொள்ள. வேண்டிய கல்வி :
21) திருக்குர்ஆனில் எத்தனை பாகங்கள் உள்ளன?
பதில் :
30பாகங்கள் உள்ளன.
22) சூரா என்றால் என்ன?
பதில் :
அத்தியாயம் என்று பெயர்
23) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்கள் உள்ளன?
பதில் :
114 சூராக்கள் உள்ளன.
24) ஆயத் என்றால் என்ன?
பதில்:
திருக்குர்ஆனின் வசனம் என்று பெயர்
25) திருக்குர்ஆனில் எத்தனை ஆயத்துக்கள் உள்ளன?
பதில் :
திருக்குர்ஆனில் 6666 ஆயத்துக்கள் உள்ளன.
26) திருக்குர்ஆன் வசனத்திற்கு மட்டும் ஏன் ஆயத் என்று பெயர் வந்தது?
பதில் :
இறைவேதமாகிய திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் அத்தாட்சியாக விளங்குவதால்..
27) திருக்குர்ஆனில் உள்ள பெரிய வசனம் எது?
பதில் :
சூறத்துல் பகராவில் உள்ள கடன் பற்றிய282வது வசனம் (யா அய்யுஹல்லதீன ஆமனூஇதா ததாயன்ந்ததும்;....)
28) திருக்குர்ஆனில் ஐன் (ருகூவு) என்றால் என்ன?
பதில் :
தொழுகையில் ஒருரக் அத்தில் ஒதுவதற்கு ஏதுவாக உள்ள ஒரு பகுதி
29) ருகூவு என்று ஏன் பெயர் வந்தது?
பதில் :
பெரும்பாலும் தொழுகையில் அதுவரை ஓதிய பிறகு ருகூவிற்கு குனிவதால்
30) திருக்குர்ஆனில் அரபி எழுத்துக்கள் 29ம் வரும் வசனங்கள் எத்தனை?
பதில் :
சும்ம அன்ஸல்னா மேலும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் இரண்டு வசனங்கள் மட்டுமே
31) திருக்குர்ஆனில் புள்ளியிட்ட எழுத்து இல்லாத வசனம் எது?
பதில் :
சூரா இக்லாஸின் 'அல்லாஹூஸ்ஸமது'என்ற வசனமாகும்.
32) திருக்குர்ஆனில் 'சுப்ஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸத்தி அம்மா யஸி ஃபூன்' என்ற வசனம் எங்கு வருகிறது?
பதில் :
ஸாஃப்பாத் என்ற அத்தியாயத்தின் கடைசியில் வருகிறது.
33) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்களின் ஆரம்பத்தில் ஹாமீம் என்று வருகிறது?
பதில் :
7 சூராக்களில் வருகிறது
34) திருக்குர்ஆனில் கூறப்படும் இறையச்சத்தை அடிப்படையாகக்
கொண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் எது?
பதில் :
மதினாவிற்கு அருகில் உள்ள மஸ்ஜிதே குபா ஆகும்.
35) திருக்குர்ஆனில் ஆயத்துல் குர்ஸி எந்த ஜூஸ்வில் உள்ளது?
பதில் :
3ம் ஜூஸ் உவின் ஆரம்பத்தில் வருகிறது.
36) திருக்குர்ஆனில் யாஸூன் சூரா ஜூஸ்உவில் ஆரம்பிக்கிறது?
பதில் :
22ம் ஜூஸ்வின்; இறுதியில்
37) திருக்குர்ஆனில் உள்ள மொத்த ஸஜ்தா ஆயத்துகள் எத்தனை?
பதில்
திருக்குர்ஆனில் உள்ள மொத்த ஸஜ்தா ஆயத்துகள் 14 ஆகும்.
38) திருக்குர்ஆனில் உள்ள நீண்ட அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர் எது?
பதில் :
துல் ஜலாலி வல் இக்ராம்
39) திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் அனைத்திலும் ஒரே எண்ணிக்கையில் ஆயத்துக்கள் உள்ளனவா?
பதில் :
திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் அனைத்திலும் ஒரே எண்ணிக்கையில் ஆயத்துக்கள் இல்லை..
40) திருக்குர்ஆனில் எத்தனை மாதங்களின் பெயர் உள்ளது?
பதில் :
ஒரே ஒரு மாதத்தின் பெயர் தான் உள்ளது
தொடரும் ...மூன்றாம் பாகம்....இன்ஷா அல்லாஹ்....
குர்ஆனில் யா அய்யுஹல்லதீன ஆமனு என எத்தனை முறை வருகிறது
ReplyDelete11 இடங்களில்
Deleteஅல்குர்ஆனில் ஒரு ஆயத்தில் ஒரு மிருகத்தின் பெயர் 3 தடவை இடம்பெற்றுள்ளது. அம்மிருகம் எது?
ReplyDeleteஅல்குர்ஆனில் உள்ள மிகச் சிறந்த வசனம்
ReplyDeleteபுனித அல்குர்ஆன் எத்தனை தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது
ReplyDelete