பராஅத் இரவு என்றால் என்ன...?
பரகத் நிறைந்த ..
ஷபான் மாதத்தின் சிறப்புகள் ...!!
بينَ رجبٍ ورمضانَ
ரஜப் மாதத்திற்கும், ரமழான்
மாதத்திற்கும் இடையிலுள்ள மாதமே
...ஷபான் மாதமாகும்
سأل أسامةُ بنُ زيد رضي الله عنهما الرسول قائلاً: (يا رسولَ اللَّهِ ! لم ارك تَصومُ شَهْرًا منَ الشُّهورِ ما تصومُ من شعبانَ ؟ ! قالَ : ذلِكَ شَهْرٌ يَغفُلُ النَّاسُ عنهُ بينَ رجبٍ ورمضانَ ، وَهوَ شَهْرٌ تُرفَعُ فيهِ الأعمالُ إلى ربِّ العالمينَ ، فأحبُّ أن يُرفَعَ عمَلي وأَنا صائمٌ) [صحيح النسائي
ஹளரத் உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,
“அல்லாஹ்வின் திருத்தூதரே! நீங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது போன்று வேறு எந்த மாதத்திலும் நான் காணவில்லையே! என்றேன்“. அதற்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். “இது ரஜபுக்கும், ரமழானுக்கும் இடைப்பட்ட மாதமாகும். இதில் மக்கள் மதி மயக்கத்துடன் இருக்கின்றனர். ஆனால் இந்த மாதத்தில் செய்யப்படும் அமல்கள் அல்லாஹ்வின் சமுகத்திற்கு உயர்த்தப்படுகின்றன. எனது அமல்கள் உயர்த்தப்படும்போது நான் நோன்பாளியாக இருக்கவே விரும்புகின்றேன்“.
( ஆதாரம் :- இமாம் நஸஈ )
அன்னை ஆயிஷா ஸித்திக்கா
ரழியல்லாஹு அன்ஹா
عن عائشة أم المؤمنين رضي الله عنها أنها قالت : " كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول : لا يفطر ، ويفطر حتى نقول : لا يصوم ، وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ரமழான் தவிர்ந்த வேறு எந்த மாதத்திலும் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்றதையும், ஷஃபான் அல்லாத வேறு எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்றதையும் நான் கண்டதில்லை. மற்றுமொரு அறிவிப்பில் ஷஃபான் முழுவதும் நபியவர்கள் நோன்பு நோற்பார்கள். இதனை இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய இருவரும் அறிவித்துள்ளார்கள
فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ
உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம்முடைய கட்டளையின்படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப் படுகின்றன.
(அல்குர்ஆன் : 44:4)
عن عائشة عن النبي -صلى الله عليه وسلم- قال: ((هل تدرين ما هذه الليل؟ " يعني ليلة النصف من شعبان قالت: ما فيها يا رسول الله فقال: " فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم،
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல் மிஷ்காத் 1 305 )
பராஅத் இரவு என்றால் என்ன...?
ஷஃபான் மாதத்தின் பிறை 15- ம் நாள் இரவுக்கு “பராஅத்” இரவு என்றும் “நிஸ்பு ஷஃபான்” இரவு என்றும் அழைக்கப்படுகின்றது...
பராஅத் இரவுக்கு மூன்று பெயர்கள் உண்டு ...!
1 - லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு).
2 - லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு).
3 - லைலத்துல் பராஅத் (நரக விடுதலை பெறும் இரவு)
என்று பெயர்ச் சொல்லப்படுகிறது...
பரகத் நிறைந்த
பராஅத் இரவின் சிறப்புகள் ...!!
(... இவ்விரவின் சிறப்புகளைப் பற்றி அநேக நபீ மொழிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவற்றை மட்டும் இங்கு எழுதுகின்றோம்... )
أتاني جبريل عليه السلام فقال هذه ليلة النصف من شعبان , ولله فيها عتقاء من نار بعدد شعور غنم بني كلب لا ينظر الله فيها إلى مشرك ولا إلى مشاحن ولا إلى قاطع رحم ولا إلى مسبل ولا إلى عاق لوالديه ولا إلى مدمن خمر .
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
என்னிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து இன்றிரவு “ஷஃபான்” மாதத்தின் பதினைந்தாம் இரவாகும். “பனூகல்ப்” கூட்டத்தவர்களின் ஆடுகளில் உள்ள முடிகளின் எண்ணிக்கையளவு நரகத்திலுள்ள பலரை அல்லாஹ் விடுதலை செய்கிறான். எனினும் இணைவைத்து வணங்குகின்ற “முஷ்ரிக்”, குழப்பத்தை ஏற்படுத்துகின்ற “முனாபிக்” நயவஞ்சகன், உறவினரைத் துண்டித்து நடப்பவன, சாரம் அல்லது “றவ்ஷர்” போன்றவற்றை கரண்டைக்காலின் கீழ் உடுப்பவன், பெற்றோரைத் துன்புறுத்துகின்றவன், தொடர்ந்து மது அருந்துகின்றவன். முதலானவர்களை பார்க்கவே மாட்டான் ...
( அறிவிப்பு : ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள்
ஆதாரம்- பைஹகீ )
عَنْ عَائِشَةَ قَالَتْ : فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ ـ
رواه الترمذي:
ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
ஒரு நாள் இரவு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் இழந்துவிட்டேன், (காணாமல் போய்விட்டார்கள்) நான் அவர்களைத் தேடி வெளியே சென்றேன். அப்போது அவர்கள் “ஜன்னதுல் பகீஉ” உள்ள மையவாடியில் வானத்தின் பக்கம் தங்களின் தலையை உயர்த்தினவர்களாக இருந்ததைக் கண்டேன். (என்னைக்கண்ட) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே! எனக்கு ஏதேனும் நடந்திருக்கலாம் என்று நீ பயந்து விட்டாயா? என்று கேட்டார்கள். நீங்கள் வேறு மனைவியர்களிடம் சென்றிருக்கலாம் என்று நினைத்தேன் என்றார்கள் ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள். இது கேட்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ( “ஷஃபான்” பதினைந்தாம் இரவு “அல்லாஹ்” முன்வானத்திற்கு “தஜல்லீ” வெளியாகி “பனூ கல்ப்” கூட்டத்தவர்களின் ஆடுகளில் உள்ள முடிகளை விட அதிக அளவு பாவிகளின் பாவங்களை மன்னித்து விடுகிறான்) என்று கூறினார்கள்.
( அறிவிப்பு- ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் )
( ஆதாரம் – திர்முதீ – இப்னுமாஜஹ் )
عن أبي ثعلبة الخشني ، عن النبي صلى الله عليه وسلم ، قال : « إذا كان ليلة النصف من شعبان اطلع الله إلى خلقه فيغفر للمؤمن ، ويملي للكافرين ، ويدع أهل الحقد بحقدهم حتى يدعوه _
ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு அல்லாஹ் அடியார்களுக்கு வெளியாகி விசுவாசிகளின் பாவங்களை மன்னித்துவிடுகின்றான். காபிர்களை அவ்வாறே விட்டுவிடுகின்றான். அதேபோல் பொறாமைக்காரர்கள் தமது பொறாமையை விடும்வரை அவர்களையும் விட்டுவிடுகின்றான்.
( அறிவிப்பு – அபூதஃலபதல் குஷ்னீ
றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் )
( ஆதாரம் – தபறானீ, பைஹகீ )
وعن عائشة رضي الله عنها, قال رسول الله صلي الله عليه وسلم:( ان الله تعالي ينزل ليلة النصف من شعبان إلي سماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب)
ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள். இது கேட்ட நபகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : ஷஃபான் பதினைந்தாம் இரவு அல்லாஹ் முன்வானத்திற்கு “தஜல்லீ” வெளியாகி “பனூ கல்ப்” கூட்டத்தவர்களின் ஆடுகளில் உள்ள முடிகளை விட அதிக அளவு பாவிகளின் பாவங்களை மன்னித்து விடுகிறான்) என்று கூறினார்கள்.
عن عائشة قالت: قام رسول الله صلى الله عليه وسلم من الليل يصلي، فأطال السجود حتى ظننت أنه قد قبض، فلما رأيت ذلك، قمت حتى حركت إبهامه، فتحرك، فرجعت، فلما رفع رأسه من السجود وفرغ من صلاته، فقال: يا عائشة، أو يا حميراء ظننت أن النبي قد خاس بك قلت: لا والله يا نبي الله ولكني ظننت أنك قبضت لطول سجودك فقال: أتدرين أي ليلة هذه؟ قلت: الله ورسوله أعلم، قال: هذه ليلة النصف من شعبان، فيغفر للمستغفرين ويرحم المسترحمين ويؤخر أهل الحقد كما هم.
நபகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இரவு தொழுதார்கள். நீண்ட நேரம் “ஸுஜூத்” செய்து கொண்டிருந்தார்கள். (நெற்றியை தரையில் வைத்த வண்ணம் இருந்தார்கள். அவர்கள் மரணித்து விட்டார்களோ என்று நான் நினைத்து அவர்களின் கால் பெருவிரலை அசைத்துப் பார்த்தேன். அது அசைந்தது. தொழுகையை முடித்த நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே! நான் உனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைக்கின்றாயா? என்று கேட்டார்கள். இல்லை அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நீண்ட நேரம் ஸுஜூத் செய்து கொண்டிருந்ததால் நீங்கள் மரணித்து விட்டீர்களோ என்று நான் எண்ணினேன் என்று சொன்னார்கள். அப்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இன்றிரவு உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வுக்கும், றஸூல் அவர்களுக்குமே தெரியும் என்றேன்.
இன்றிரவு “ஷஃபான்” பதினைந்தாம் இரவு. இன்றிரவு அல்லாஹ் தனது அடியார்களுக்கு “தஜல்லீ” வெளியாகி பாவமன்னிப்புக் கேட்பவர்களுக்கு அவர்களின் பாவங்களை , அருள் வேண்டுவோருக்கு அருள் செய்கிறான். பொறாமை நெஞ்சுள்ளவர்களை அவ்வாறே விட்டுவிடுகின்றான்.) என்று கூறினார்கள்.
( அறிவிப்பு – ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள்..
அலா இப்னுல் ஹாரித் ஆதாரம் – பைஹகீ )
பராஅத் அன்று நோன்பு வைப்பது சுன்னத்தான ஒரு காரியமே...!!!
حدثنا الحسن بن علي الخلال . حدثنا عبد الرزاق . أنبأنا ابن أبي سبرة عن إبراهيم بن محمد عن معاوية بن عبد الله بن جعفر عن أبيه عن علي بن أبي طالب قال : – قال رسول الله صلى الله عليه و سلم ( إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها . فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا . فيقول ألا من مستغفر لي فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر )
‘அல்லாஹ் ஷஃபான் 15 வது இரவில் சூரிய அஸத்தமனத்தின் போது முதல் வானத்திற்கு இறங்கி என்னிடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர் யார்? அருள் வேண்டுபவர் யார்? துயர் நீங்கக் கேட்பவர் யார்? மன்னிப்பதற்கும் அருள் வழங்கவும் ஆரோக்கியம் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். விடியும் வரையில் கூறிக் கொண்டே இருப்பான். எனவே அவ்விரவில் எழுந்து வணங்குங்கல் பகலில் நோன்பு .’ என்று நபியவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்; அலீஇஆதாரம்: இப்னுமாஜஹ்:1388)
ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் மஃகரிப் தொழுகைக்கு பின் சூரா யாஸீன் ஓதுவதன் அவசியம் ...
ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் மஃரிப் தொழுகையின் பிறகு மூன்று தடவைகள் சூரா யாஸீனை :
முதலாவது தடவை ஓதும் போது:
பாவமன்னிப்புத் (பிழை பொறுக்கத்) தேடியும்,
இரண்டாவது தடவை ஓதும் போது :
ரிஸ்க் எனும் உணவு விச்தீரனம பெறவும்,
மூன்றாவது தடவை ஓதும் போது :
சரீர சுகத்தையும் ஆரோக்கியத்தையும் வேண்டி ஸாலிஹான அமல்கள் செய்வதற்கு நீண்ட ஆயுளை கேட்டு பிராத்தனை செய்து ஓத வேண்டும்...
.....
.....
....
There is no hadeed numbers. So we cannot accept
ReplyDelete3:105 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْبَيِّنٰتُؕ وَاُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ
ReplyDelete3:105. (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.