அல்லாஹ் அங்கே இப்பொழுது என்ன செய்கின்றான்...?

              அல்லாஹ்வின் சின்னம் ...

                சுபுஹானல்லாஹ்...!!

அல்லாஹ் அங்கே இப்பொழுது என்ன செய்கின்றான்...?

எங்கள் அண்ணல் நபி மீது ஸலவாத்து சொல்கின்றான்.

 இப்பொழுது வானவர்கள் என்ன செய்கின்றார் ...?

அந்த ஏகனுடன் சேர்ந்து ஸலவாத்து சொல்கின்றார்..

எட்டு திக்கும் என்ன சப்தம் கேட்கலானது..?

ஞான முத்து நபி நாமம் அதை ஓதுகின்றது..

    اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيـن
சொர்க்கப் பாதை எங்கிருந்து செல்லுகின்றது...?

அந்த ஜோதி மதீனாவிலிருந்து செல்லுகின்றது...

     اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيـن
எந்த இடம் பூமியிலே சொர்க்கமானது..?

நபி ரவ்ழா ஷரீஃப் பூவுலகில் ஜன்னத்தானது...

    اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيـن
அண்ணலாரைக் கண்ட கண்கள் யாரைக் கண்டது...?

அந்த ஆண்டவனை பார்த்ததாக அர்த்தமானது.

     اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيـن
ஏழை ஸஹாபாக்கள் பசி தீர்ந்ததெப்படி..?

ஒளி ஏந்தல் முகம் பார்த்து பசி போனதப்படி.

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيـن
மாமதீனா மக்கள் தாகம் தீர்வதெப்படி..?

அந்த மன்னர் விரல் பொங்கும் நீரில் தீர்ந்ததப்படி.

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيـن
நாயகத்தின் வியர்வை எங்கும் வாசம் வீசுது ..
அதை பூசிய பரம்பரைக்கே வாசம் வந்ததே...

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيـن
காவலனை கண்ட கண்கள் யாருடையது..?

பிலால் கருப்பை ரசித்த நபி கண்கள் தானது.

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيـن
அர்ஷில் நடந்த கால்கள் யாருடையது..?

அன்னை ஆமினா முத்தம் பதித்த பாதம் தானது.

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيـن
ஜிப்ரயீல் கட்டிக் கொண்ட மேனி யாரது..?

பூமி முத்தமிட ஏங்கும் சுத்த மேனி தானது.

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيـن

Comments

Popular

அரஃபா நோன்பின் சிறப்பு :

குர்பானி எப்போது கடமையாகும் ?

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

நபி இப்ராஹிம் [ அலை ] அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள் என்ன!!

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

குர்பானி & உழ்ஹிய்யா பற்றிய தெளிவான விளக்கம்...

குர்பானி ஏன் ? எதற்க்கு ?