புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ]


புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம் 
இதோ உங்களுக்காக : 

இறைவன் கூறுகிறான் :


 யாருக்கு ஹஜ் செய்ய சக்தி இருக்குமோ அவர்கள் மீது ஹஜ் கடமையாக இருக்கும் [ 3=97 ] 


நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 

எவர் ஹஜ்ஜூ செய்து ஹ்ஜஜூக்கு பாதகமான காரியங்கள் செய்யாமலும் , வீணான வார்த்தைகள் பேசாமலும் , இருக்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போல் ஆவார் , 

[ அறிவிப்பாளர் = அபூஹூறைரா [ ரலியல்லாஹூ அன்ஹூ ] [ நூல் = புகாரி =1819 ] 


ஹஜ்ஜின் முதல் நாள் = 1 [ அதாவது ] துல் ஹஜ் பிறை = 8  <>  [ மினாவில் ]


> இஹ்ராம் உடைய நிலையில் மினாவில் தங்குதல்.

> லுஹர் , அஸர் , மஃரிப் , மற்றும்  இஷா , தொழுகையை நிறைவேற்றுதல் .

> இரவு மினாவில் தங்குதல்.

ஹஜ்ஜின் இரண்டாம் நாள் =2 [ அதாவது ] துல் ஹஜ் பிறை = 9 <> [ மினா & அரஃபா

> மினாவில் இன்று ஃபஜர் தொழுகையை  நிறைவேற்றுதல் 

>  சூரியன் உதயமானதற்கு பின் அரஃபாவிற்க்கு புறப்ப்டுதல் 

>  சூரியன் நடு உச்சியில் அடைந்த  நேர முதல் சூரியன் மறையும் நேரம் வரை அரஃபாவில் தங்குதல் ,

>  அரஃபாவில் இன்று லுஹரும் ,அஸரும் நிறை வேற்றுதல்..

>  சூரியன் மறைந்த பின் அரஃபாவில் மஃகரிப் தொழுகை  நிறை வேற்றாமல் முஜ்தலிஃபாவிற்கு புறப்படுதல்.

>   முஜ்தலிஃபாவில் இஷா வுடைய நேரத்தில் மஃகரிபும் ,இஷாவும் நிறைவேற்றுதல் .

>  இரவு முஜ்தலிஃபாவில் தங்குதல் . 


ஹஜ்ஜின் மூன்றாம் நாள் = 3 [ அதாவது ] துல் ஹஜ் பிறை = 10 <> [ முஜ்தலிஃபா ] 


>  முஜ்தலிஃபாவில் இன்று ஃபஜர் சாதிக் அதிகாலையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தங்குதல் .

>  முஜ்தலிஃபாவில் இன்று ஃபஜர் தொழுகை நிறை வேற்றுதல் .

>  சூரியன் உதித்ததற்க்கு பின் மினாவிற்க்கு  புறப்படுதல் .

>  மினாவில் இன்று சூரியன் உதித்த நேரத்திலிருந்து சூரியன்  நடு உச்சி அடையும் நேரம் வரை பெரிய ஷைத்தானுக்கு [ மட்டும் ] கல் எறிதல் . 

>  குர்பானி கொடுத்தல் .

>  தலைமுடி இறக்குதல் / குறைத்தல் .

>  இஹ்ராம் உடைய உடைகளை நீக்கிவிட்டு தினசரி ஆடைகளை அணிந்துக் கொள்ளுதல் .

>  தவாபே ஜியாரத் செய்தல் .

>  ஸஃயீ செய்தல் 

>  இரவு மினாவில் தங்குதல் .


ஹஜ்ஜின் நான்காம் நாள் = 4 [ அதாவது ] துல் ஹஜ் பிறை = 11 <> 


> [  நேற்றைய தினம் செய்யாமல் இருந்தால் இன்று ] 

>  தவாபே ஜியாரத் செயிதல் .

>  மினாவில் சூரியன் நடு உச்சி அடைந்த நேரம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை மூன்று  ஷைத்தானுகளுக்கும் கல் எறிதல் 

>  முதலில் சின்ன ஷைத்தானுக்கு கல் எறிதல் .

>  பின்னர் நடு ஷைத்தானுக்கு கல் எறிதல்.பிறகு  பெரிய ஷைத்தானுக்கு கல் எறிதல் 

>  இரவு மினாவில் தங்குதல் 


ஹஜ்ஜின் ஐந்தாம் நாள் = 5 [ அதாவது ] துல் ஹஜ் பிறை = 12 <> 


> [ நேற்றைய தினம் செய்யாமல் இருந்தால் இன்று ] தவாபே ஜியாரத் செய்தல் 

>  மினாவில் சூரியன் நடு உச்சி ஸ்டைந்த நேர முதல் சூரியன் மறையும் நேரம் வரை மூன்று ஷைத்தாங்களுக்கும் கல் எறிதல் .

>  பின்னர் நடு ஷைத்தானுக்கு கல் எறிதல் .

>  பின்னர் பெரிய ஷைத்தானுக்கு கல் எறிதல் . 

>  மஃகரிபிற்கு முன் மக்காவிற்க்கு புறப்படுதல் .ஊரு திரும்பும் முன் தவாபே விதா [ விடைபெறும் தவாப் ] செய்தல் .


குறிப்பு : 

மஃகரிபிற்கு பின்னும் ஒருவர் மினாவில் தங்கிவிட்டால் பிறை 13 அன்றும் சூரியன் நடு உச்சியை அடைந்த  நேரம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை மூன்று  ஷைத்தான்களுக்கும் கல் எறிய வேண்டும் .


 உம்ரா :

நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் கூறினார்கள் : ஒர் உம்ரா செய்வது மறு உம்ரா வரை [ ஏற்படும் சிறு ] பாவங்களுக்குப் பரிகாரமாகும் 

[ அறிவிப்பாளர் = அபூஹூரைரா [ ரலியல்லாஹூ அன்]ஹூ ] [ நூல் = புகாரி = 1773 ]


உம்ரா : 

உம்ரா விற்க்கான இஹ்ராம் கட்டுதல் [ஷர்த்து ] தவாஃப் செய்தல் [ ரமலுடன் ]ருக்ன் ] ஸஃயீ செய்தல் [ வாஜிப் ] தலைமுடி இறக்குதல் / குறைத்தல் [ வாஜிப் ]

ஹஜ் இஃப்ராது : 

இஹ்ராம் கட்டுதல் [ ஷர்த்து ] , தவாபே குதூம் செய்தல் [ சுன்னத் ] .மினாவில் தங்குதல் [ சுன்னத் ] அரஃபாவில் தங்குதல் [ருகன் ] முஜ்தலிஃபாவில் தங்குதல் [ வாஜிப்] பெரிய ஷைத்தானுக்கு  [ மட்டும் ] கல் எறிதல் [ வாஜிப் ] , விரும்பினால் குர்பானி கொடுத்தல் தலைமுடி இறக்குதல் / குறைத்தல் [ வாஜிப் ]  தவாபே ஜியாரத் செய்தல் [ ருக்ன் ] ஸஃயீ செய்தல் [ வாஜிப்]மூன்று ஷைத்தான் களுக்கும் கல் எறிதல் [வாஜிப் ] விடை பெறும் தவாப் செய்தல் [ வாஜிப் ] 


ஹஜ் கிரான் : 

ஹஜ் மற்றும் உம்ரா விற்க்கான இஹ்ராம் கட்டுதல் [ ஷர்த்து ] உம்ராவிற்க்கான தவாப் செய்தல் [ ரமலுடன் ] [ ருக்ன் ] உம்ராவிற்க்கான ஸஃயீ செய்தல் [ வாஜிப் ] தவாபே குதூம்செய்தல் [ ரமலுடன் ] [சுன்னத் ] ஹஜ்ஜிற்க்கான ஸஃயீ செய்தல் [வாஜிப் ] மினாவிலும் ,அரஃபாவிலும் தங்குதல் [ ருக்ன் ] முஜ்தலிஃபா வில் தங்குதல் [ வாஜிப் ] பெரிய ஷைத்தானுக்கு [மட்டும் ] கல் எறிதல் [ வாஜிப் ] குர்பானி கொடுத்தல் [ வாஜிப் ] தலை முடி இறக்குதல் / குறைத்தல் [ வாஜிப் ] தவாபே ஜியாரத் செய்தல் [ ருக்ன் ] மூன்று ஷைத்தாங்களுக்கும் கல் எறிதல் [ வாஜிப் ] விடை பெறும் தவாப் செய்தல் [ வாஜிப் ] 


ஹஜ் தமத்துஃ :

உம்ராவிற்க்கான இஹ்ராம் கட்டுதல் [ஷர்த்து ] உம்ரா விற்க்கான தவாபே செய்தல் [ ரமலுடன் ] [ ருக்ன் ] உம்ராவிற்க்கன ஸஃயீ செய்தல் [ வாஜிப் ] தலை முடி இறக்குதல் / குறைத்தல் [ வாஜிப்] துல் ஹஜ் பிறை 8ம் நாள்  ஹஜ்ஜிற்க்கான இஹ்ராம் கட்டுதல் [ ஷர்த்து ] மினாவில் தங்குதல் [ சுன்னத் ] அரஃபாவில் தங்குதல் [ருக்ன் ] முஜ்தலிஃபாவில் தங்குதல் [சுன்னத் ] பெரிய ஷைத்தானுக்கு [ மட்டும் ] கல் எறிதல் [ வாஜிப் ] குர்பானி கொடுத்தல் [ வாஜிப் ] ஹஜ்ஜிற்க்கான ஸஃயீ செய்தல் [வாஜிப் ] மூன்று ஷைத்தானுக்க்ளுக்கும் கல் எறிதல் [ வாஜிப் ] விடை பெறும் தவாப் செய்தல் [ வாஜிப் ] 


ஹஜ்ஜூம் மற்றும் உம்ராவும் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக !!! ஆமீன் ஆமீன் ஆமீன் !!! 



மௌலனா மௌலவி:- 

இர்ஷாதுல்லாஹ் - அஸ்ஹரி ,ஸஃயீதி

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்