ஒரு பெண்ணையும் அவள் சாச்சியையும் ஒரே நேரத்தில் முடிக்கலாமா?


அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது...!!


                                பகுதி : - 2
ஒரு பெண்ணையும் அவள் சாச்சியையும் ஒரே நேரத்தில் முடிக்கலாமா...?

ஒரு பெண்ணையும், அவளது தாயின் சகோதரிகளையும் (சாச்சி, பெரியம்மா) தந்தையின் சகோதரி (மாமி)யையும் ஒரே நேரத்தில் ஒருவர் மணமுடிப்பது இஸ்லாத்தில தடைசெய்யப்பட்டதாகும்.

எனினும் அல் குர்ஆன் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவர்கள் பற்றி குறிப்பிடுகின்றது. அதில் இந்தத் தரப்பினர் இடம்பெறவில்லை. அந்த வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது.

“…. இவர்களைத் தவிர ஏனையோரை நீங்கள் விபச்சாரத்தில் ஈடுபடாதவர்களாகவும்,   கற்பொழுக்கம் உடையவர்களாகவும், உங்கள் செல்வங்களை (மஹராக)க் கொடுத்து அடைந்து   கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது…..” (4:24)

என்று முடிக்கின்றான்.

இதற்குப் பின்னால் உள்ள உறவினர்கள் அனைவரும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளனர்.

எனக் குர்ஆன் கூறிய பின்னர் ஹதீஸ் வேறு சிலரையும் சில சந்தர்ப்பத்தில் திருமணம் முடிக்கத் தாகாகவர்கள் எனக் கூறுகின்றது.

இப்போது குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி இத்தகைய ஹதீஸ்களை மறுப்பதா..? அல்லது ஹதீஸும் சட்ட ஆதாரம்தான் குர்ஆனின் சட்டத்தையும், ஹதீஸின் சட்டத்தையும் இணைத்துத்தான் முடிவெடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதா..?

 எது நேர்வழி, எது வழிகேடு என்று சிந்தித்துப் பாருங்கள். குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றை மோத விடாமல் இரண்டையும் இணைத்து பொருள் கொள்வதுதானே நியாயமான நிலை..? நேர்மையான விடை..? இதை விட்டும் விலகிச் செல்வது நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்களின் தூதுத்துவத்தை முழுமையாக ஏற்காத குற்றத்தில் அல்லவா நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும்..?

தொடரும்...இன்ஷா அல்லாஹ்....!!!

பகுதி :- 3 ....

Comments

Popular

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

கலிமாவின் விளக்கம்...

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

அம்பா நாயகம் ..