இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்கள் கூறினார்கள...!!!


       மஹான் இப்ராஹீம் பின் அத்ஹம்              (ரஹ்மத்துல்லாஹி அலைஹி )                    அவர்கள் கூறினார்கள...!!!


صل من قطعك واعف عمن ظلمك واحسن من اساء اليك
உனது உறவை வெட்டியவனோடு நீ ஒட்டிக்கொள். 

உனக்கு அநீதமிழைத்தவனை மன்னித்து விடு. 

உனக்கு தீங்கு செய்தவனுக்கும் நீ உபகாரம் செய்” 


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்கு...

ஒரு நாள் ஒரு ராணுவ வீரன் ஊருக்கு வெளியே வந்து கொண்டிருந்தான்.

அங்கே மஹான் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களை வழியில் கண்டு “மக்கள் குடியிருப்பு எங்கே இருக்கிறது…..? எனக் கேட்டான்.

அதற்கு மஹான் அவர்கள் கப்ருஸ்தானை (கல்லறையை)க் காட்டி அதோ.....

அது தான் என்று சொன்னார்கள். அவனுக்கு கோபம் வந்தது. நான் கப்ருஸ்தானைக் கேட்க வில்லை மக்கள் வசிக்கக்கூடிய பகுதியைக் கேட்கிறேன் என்று சொன்னான்.

அது தான் உண்மையில் மக்கள் குடியிருப்பு என திரும்பவும் சொன்னார்கள். கோபத்தில் கடுமையாக அடித்து விட்டான்.

வேகத்தோடு நகருக்கு வருகிறான். அப்போது நகரத்தில் உள்ள மக்கள் மஹானை உற்சாகத்தோடு வரவேற்றார்கள்.

அதுகண்டு அதிர்ச்சியுற்ற குதிரை வீரன் நாம் நைய்யப்புடைத்த
இந்த மனிதருக்கு இவ்வளவு வரவேற்பா?
அப்படியென்றால் இவர் யார்?
இவர் தான் பல்க் நாட்டின் பேரரசராக இருந்து முடி துறந்த இறைஞானி  இப்ராஹீம் பின் அத்ஹம் என்று சொல்லப்பட்டது.

அப்போது வேதனைப்பட்டு, நானிக்குருகி மஹானிடத்தில் சென்று மன்னிப்பு கேட்டான்.

நீங்கள் யார் என்று தெரியாமல் தவறு நடந்து விட்டது.

என்னிடம் நீங்கள் உங்களைப் பற்றி அடிமை என்று சொன்னீர்கள்?

அதனால் நடந்த விபரீதம் அல்லவா இது! ஏன் அப்படிச் சொன்னீர்கள்?

அதற்கு இறைஞானி அவர்கள்,அடிமையா?எனக்கேட்டீர். ஆம் என்றேன்.

யாருக்கு அடிமை ? என்று கேட்கவில்லை.
கேட்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அடிமை என்று சொல்லியிருப்பேன் என்றார்.

என்னை மன்னித்து எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கரைந்துருகி கேட்ட போது என்னை அடிக்கத் தொடங்கிய போதே உன்னை மன்னித்து உனக்கு சொர்க்கம் கிடைக்க பிரார்த்தனை செய்து விட்டேன் என்று சொன்னார்கள்.

அவன் உங்களுக்கு அநியாயம் செய்திருக்க அவனுக்காக இப்படியொரு பிரார்த்தனையா ?எனக் கேட்கப்பட்ட போது, அவன் மூலமாக எனக்குத் தீங்கு ஏற்பட்டது. நான் மன்னிக்கவில்லை யெனில் என் காரணமாக அவனுக்குத் தீங்கு ஏற்படும் அல்லவா!

அப்படியென்றால் இருவருக்கும் மத்தியில் என்ன வித்தியாசம்? மேலும், நான் பொருமையாக இருந்ததால் எனக்கு அவன் மூலம் சொர்க்கத்தில் பதவி உயர்வு கிடைகும் போது என் காரணமாக அவனுக்கு நரகம் கிடைக்கக் கூடாதல்லவா!

எனவே நான் அவனுக்காக பிரார்த்தனை புரிந்தேன் என்றார்கள்...
இதுதான் இறைநேசர்களின் பன்பு.....

Comments

Popular

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

கலிமாவின் விளக்கம்...

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

குர்ஆனை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய கல்வி