முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள் 

             முஅவ்விதன் முபஸ்மிலன்        

        முஹம்திலன் முஸல்லியன்          

                      வமுஸ்ல்லிமன்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகதுஹூ


1 - யா  ஷைQக்  முஹ்யித்தீன் -  மார்க்கதிற்கு உயிரூட்டிய மகத்தான குரு நாதரே.

2 - யா ஸைய்யிது முஹ்யித்தீன் -
சன்மார்க்கத்தை உயிர்ப்பித்தல் சத்தியத் தலைவரே.

3 - யா மொலானா முஹ்யித்தீன் -
இறைமார்க்கத்திற்கு உயிர்தந்த எங்கள் தலைமையே .

4 - யா மக்தூம் முஹ்யித்தீன் -  உன்னத மார்க்கத்தை உயிரூட்டி மீட்ட ஒப்பற்ற எஜமானே .

5 - யா தர்வேஷ் முஹ்யித்தீன் -  நேர்வழிக்கும் உயிரூட்டிய நிகரற்ற பக்த சிரோன்மணியே.

6 - யா காஜா முஹ்யித்தீன் -
நல்வழிக்கு உயிர் நல்கிய ஞான வேந்தரே .

7 - யா சுல்தான் முஹ்யித்தீன் -
மாதவத்திற்கு உயிரூட்டிய மா மன்னரே .

8 - யா ஷாஹ் முஹ்யத்தீன் -
பேரின்ப நெறிக்கு உயிர் வழங்கிய  பேர்ராசரே .

9 - யா கௌஸ் முஹ்யித்தீன் -
இலட்சி வழிக்கு வாழ்வளித்த இரட்சகரே .

10 - யா குதுப் முஹ்யித்தீன் -
ஆன்மிகத்தை வாழவைத்த அதிபதியே .

11 - யா சைய்யிதஸ் ஸதாத்தி அப்துல் காதிர் முஹ்யத்தீன் -
தவமார்க்கத்தை தழைக்கச் செய்த தன்னிகரற்ற மகாசக்தியின் அடியாரான மாட்சிமைமிக்க மகா தலைவரே .

12 - யா முஹ்யித்தீன் யா பஹ்ரு பிலா தரபின் -
எல்லையற்ற பெரும் கடலே .

13 - யா முஹ்யத்தீன்  யா பாஸூல் அஷ்ஹபி -
மெய்ஞான ராஜாளியே

14 - யா முஹ்யித்தீன் யா பாரிஜல் குரபி -
துன்பங்களை போக்குபவரே .

15 - யா முஹ்யித்தீன் யா கௌஸூல் அஃலம் -
ண இரட்சகரே .

16 -  யா முஹ்யித்தீன் யா வாஸி அல்லாத பி வல்கரம் -
மாபெரும் கருணை வள்ளலே .

17 - யா முஹ்யித்தீன் யா கன்ஜல் ஹகாஇகி -
சத்திய கருவூலமே .

18 - யா முஹ்யித்தீன் யா மஃதினத் தகாயிகி -
நுண்மதியின் உறைவிடமே .

19 - யா முஹ்யித்தீன் யா வாஸிதஸ் ஸில்கி வஸ்ஸூலூகி -
நேர்வழிக்கும் நற்செயல்களுக்கும் கருப்பொருளே .

20 - யா முஹ்யித்தீன் யா ஸாஹிபல் முல்கி வல் முலூகி - ஆட்சியும் அதிகாரங்களும் கொண்டவரே .

21 - யா முஹ்யித்தீன் யா ஸூல்தானல் ஆரிபீன் -
ஞானவான்களின் பேரரசரே .

22 - யா முஹ்யித்தீன் யா தாஜல் முஹக்கிகீன்  -
இறை வேட்கையாளர்களின் மகுடமே .

23 - யா முஹ்யித்தீன் யா ஸாகியல்  ஹூமய்யா -
மெய்ஞான அமுதம் ஊட்டுபவரே .

24 - யா முஹ்யித்தீன் யா ஜமீலல் முஹய்யா -
அழகிய திருமுகமே .

25 - யா முஹ்யித்தீன் யா பர்கத்தல் அனாமி -
மனிதகுலத்தின் செல்வமே .

26 - யா முஹ்யித்தீன் யா மிஸ்பாஹல் லலாமி -
இருள் அகற்றும் திருவிளக்கே.

27 - யா முஹ்யித்தீன் யா ஷம்ஸூபிலா அபலின் -
மறையாத சூரியனே .

28 - யா முஹ்யித்தீன் யா துர்ரு முஹ்யித்தீன் -
நிகரற்ற முத்தே .

29 - யா முஹ்யித்தீன் யா பத்ரு பிலா கலபின் -
மாசுமருவற்ற முழு நிலவே .

30 - யா முஹ்யித்தீன் யா கஸானத்தல் அஸ்ரார் -
ரகசியங்களின் உறைவிடமே .

31 - யா முஹ்யித்தீன்  யா முப்திய ஜமாலில்லாஹி -
இறை ஒளியை வெளிப்படுத்துவரே .

32 - யா முஹ்யித்தீன் யா நாயிபே ரசுலில்லாஹி -
இறை தூதரின் பிரதிநிதியே .

33 - யா முஹ்யித்தீன் யா ஸிர்ரல் முஜ்தபா -
தேர்ந்தெடுக்கப்பட்ட ரகசியமே.

34 - யா முஹ்யித்தீன் யா நூரல் முர்தலா - அன்புருவானவனின் பேரொளியே .

35 - யா முஹ்யித்தீன் யா குர்ரத்துல் உயூன் -
கண்களின் குளிர்ச்சியே .

36 - யா முஹ்யித்தீன் யா ஜல்வஜ்ஹில் மைமூன் - புனித முகம் படைத்தவரே .

37 - யா முஹ்யித்தீன் யா ஸாலிஹல் அஹ்வால் -
தூய்மையின் திரு உருவே .

38 - யா முஹ்யித்தீன் யா ஸாதிகல் அக்வால் -
சத்தியத் திருமொழியே .

39 - யா முஹ்யித்தீன் யா மக்பூல ரப்பில் ஜன்னாத்தி -
சொர்க்க அதிபதியின் சொந்தமே .

40 - யா முஹ்யித்தீன் யா ஜலீஸர் ரஹ்மான் -
அருளாளன் தர்பாரில் அமர்பவரே .

41 - யா முஹ்யித்தீன் யா மஷ்ஹூரன் மினல் ஜீலான் -
ஜீலானின் புகழ் பெற்ற ஜீவ நதியே .

42 - யா முஹ்யித்தீன் யா குத்புல் அக்தாப் -
இறை பிரதிநிதிகளுக் கெல்லாம் பெரும் தலைவரே .

43 - யா முஹ்யித்தீன் யா பர்தல் அஹ்பாப் -
இறை நேசர்களில் தன்னிகரற்ற தவமணியே .

44 - யா முஹ்யித்தீன் யா ஸைய்யிதி யா ஸனதி - ( எங்கள் ) தலைவரே ( எங்கள் ) ஆத்தாரமே .

45 - யா முஹ்யித்தீன் யா மவ்லாயி -
( எங்கள் ) மிதன்மையானவரே.

46 - யா முஹ்யித்தீன் யா குவ்வத்தி - ( எங்கள் ) ஆற்றலே.

47 - யா முஹ்யித்தீன் யா கௌஸி -
( எங்கள் ) ரட்சகரே .

48 - யா முஹ்யித்தீன் யா அவ்னி -
( எங்களுக்குரிய ) உதவியே .

49 - யா முஹ்யித்தீன் யா பஹ்ரஷ் ஷரீஅத் -
( ஆன்மி்கக் கோட்டையின் முதல் படியான ஷரீஅத் ,என்னும் ) ஒழுக்கப் பண்பாட்டு பெரும் கடலே .

50 - யா முஹ்யித்தீன் யா சுல்தானத் தரீகத் -
( இரண்டாம் படியான தரீகத் என்னும் ) ஆன்மீகப் பாதையின் பேர்ரசரே .

51 - யா முஹ்யித்தீன் யா புர்ஹானல் ஹகீகத் -
( மூன்றாம் படியான ஹகீகத் என்னும் ) கருப் பொருளின் ஆதாரமே .

52 - யா முஹ்யித்தீன் யா தர்ஜூமானல் மஅரீபத் -
( முழுமை நிலையான  மஃரீபத் என்னும் ) ஆன்மீ்கக் கோட்டையின் மெய்ப் பொருளே .

53 - யா முஹ்யித்தீன் யா அஸ்பல் அஸ்பியாயி -
தூய்மையாளர்களில் தூய்மையாளரே .

54 - யா முஹ்யித்தீன் யா கரீமத் தரபைன் -
இம்மை மறுமை அனைத்திலும் கொடை வள்ளலே .

55 - யா முஹ்யித்தீன் யா உம்தத்துல் பரீகைன் -
இகம்பரம் அனைத்திலும் உயர்ந்தவரே .

56 - யா முஹ்யித்தீன் யா ஸப்வத்தல் ஆபிதீன் -
வணக்காவாதிகளின் தூய்மையே .

57 - யா முஹ்யித்தீன் யா கவிய்யல் அர்கான் -
வலிமை வாய்ந்த மார்க்கத்தூணே .

58 - யா முஹ்யித்தீன் யா ஹபீபர் ரஹ்மான் -
பேர்ருளாளனின் நேசரே .

59 - யா முஹ்யித்தீன் யா முஜ்லியல் கலாமில் கதீம் -
ஆதி உண்மையை வெளிப்படுத்துபவரே .

60 - யா முஹ்யித்தீன் யா கிப்லத்துல்  முவஹ்ஹிதீன் -
இறையுணர்வாளர்கள் முன்னோக்கும் தலமே .

61 - யா முஹ்யித்தீன் யா முஹ்ஸினல் பஷர் -
மனித குலத்திற்கு நலம் விளைவிக்கும் மா மணியே .

62 - யா முஹ்யித்தீன் யா ஷிபாஅ அஸ்காமிஸ் ஸகீம் -
தீராத நோய்களையெல்லாம் தீர்த்து வைக்கும் மா மருந்தே .

63 - யா முஹ்யித்தீன் யா அத்கல் அத்கியாயி -
பயபகதி உடையோர்கள் அனைவருக்கும் மேலானவரே.

64 - யா முஹ்யித்தீன் யா நாரல்லாஹி முகதத்த -
இறை பிரகாச நெருப்பே .

65 - யா முஹ்யித்தீன் யா ராஹி மன்னாஸ் -
மனிதர்களிடம் கருணைகாட்டும் கருணைக்கடலே .

66 - யா முஹ்யித்தீன் யா முஸ்ஹிபல் பாஸ் -
துன்பம் துடைப்பவரே .

67 - யா முஹ்யித்தீன் யா முபத்திஹல் குனூஸ் -
கருவூலங்களைத் திறப்பவரே .

68 - யா முஹ்யித்தீன் யா மஃதினர் ருமூஸ் -
ரகசியங்களின் சுரங்கமே .

69 - யா முஹ்யித்தீன் யா கஅபத்தல் வாஸிலீன் -
பக்தர்களின் கருவறையே .

70 - யா முஹ்யித்தீன் யா வஸீலத்தத் தாலிபீன் -
தேடுவோரின் புதையலே .

71 - யா முஹ்யித்தீன் யா குவ்வத்தஸ் லுஅபாயி -
பலஹீனமானவர்களின் பக்க பலமே .

72 - யா முஹ்யித்தீன் யா  மல்ஜஅல் குரபாயி -
ஏழைகளின் அடைக்கலமே .

73 - யா முஹ்யித்தீன் யா இமாமல் முத்தகீன் -
பயபக்தி உடையவர்களின் முதல்வரே .

74 - யா முஹ்யித்தீன் யா ஹயாத்தல் அப்யிதத்த - உள்ளங்களின் உயிர் வாழ்வே .

75 - யா முஹ்யித்தீன் யா ஷைகல் குல்லி -
பரிபூரண ஞான குருவே .

76 - யா முஹ்யித்தீன் யா தலீலஸ் ஸூபுலி -
எல்லா மார்க்கத்திற்கும் ஆதாரமே .

77 - யா முஹ்யித்தீன் யா நகீபல் மஹ்பூபீன் -
அன்பர்களின் வழிகாட்டியே .

78 - யா முஹ்யித்தீன் யா மக்ஸூதஸ் ஸாலிகீன் -
நேர்வழிச் செல்வோரின் இலட்சியமே .

79 - யா முஹ்யித்தீன் யா பாத்திஹல் முஙல்லகாத் -
துன்ப துயரங்களை துடைப்பவரே .

80 - யா முஹ்யித்தீன் யா காபியல் முஹிம்மாத் -
கஷ்டங்களில் கை கொடுப்பவரே .

81 - யா முஹ்யித்தீன் யா ஸைய்யிதஸ்  ஸாதாத் -
தலைவர்களுக்கெல்லாம் பெரும் தலைவரே .

82 - யா முஹ்யித்தீன் யா மம்பஅஸ் ஸஆதாத் -
நேர்மையாளார்களின் புகலிடமே .

83 - யா முஹ்யித்தீன் யா பாலியல் குலாத் -
நீதிவான்களுக்கெல்லாம் நிகரற்ற நீதிவானே .

84 - யா முஹ்யித்தீன் யா நூருல் மலாயி -
வானவர்களின் ஒளியே .

85 - யா முஹ்யித்தீன் யா கஷிபல் அஸ்ரார் -
ரகசியங்களை வெளிப்படுத்துபவரே .

86 - யா முஹ்யித்தீன் யா திராஸல் அவ்லியா -
இறை தோழர்களின் அணிகலனே .

87 - யா முஹ்யித்தீன் யா அலுதல் புகராயி -
ஏழைகளின் சக்தியே .

88 - யா முஹ்யித்தீன் யா ஸல்  அஹ்வாலில் அஸீ மத்தீ -
தன்னிகரற்ற தவராஜ சிங்கமே.

89 - யா முஹ்யித்தீன் யா ஸல் அவ்ஸாபிர் ரஹீமத்தீ -
அருள் புரிகின்ற நற்குணச் சிகரமே .

90 - யா முஹ்யித்தீன் யா இமாமுல் அயிம்மத்தி -
தலைமைகளுக்கெல்லாம் பெரும் தலைமையே .

91 - யா முஹ்யித்தீன் யா காஷிபல் ஙூம்மத்தி - கவலைகளை போக்குபவரே .

92 - யா முஹ்யித்தீன் யா ஷம்ஸூஷ் ஷூமூஸி -
சூரியன்களுக்கெல்லாம் ( பெரும் ) சூரியனே .

93 - யா முஹ்யித்தீன் யா ஸஹ்ரத்தன் நுபூஸி -
உயிர்களின் ஒளிச்சுடரே .

94 - யா முஹ்யித்தீன் யா ஹாதியன் நஸீமி -
வழிகாட்டும் தென்றலே .

95 - யா முஹ்யித்தீன் யா முஹ்யியர் ரமீமி -
மக்கிப்போன எலும்பையும் உயிர்ப்பிப்பவரே .

96 - யா முஹ்யித்தீன் யா ஆலியல் ஹிம்மி -
உறுதிப்பாட்டின் சிகரமே .

97 - யா முஹ்யித்தீன் யா நாமூஸல் உம்மி -
அடியார்களின் பெருமிதமே .

98 - யா முஹ்யித்தீன் யா ஹூஜ்ஜதல் ஆஷிகீன் -
தங்கள் நேசர்களின் ஆதாரமே.

99 - யா முஹ்யித்தீன் யா ஸூல்தானல் வாஸிலீன் -
தங்களைச் சார்ந்தோர்களின் பேர்ரசரே .

100 - யா முஹ்யித்தீன் யா வாரிஸன் நபிய்யில் முக்தார் -
முழு அதிகாரம் பெற்ற நபிகத்தின் வாரிசே .

101 - யா முஹ்யித்தீன் யா பாத்திஹல் முஷ்கிலாத்தி -
கஷ்டங்களை நீக்கும் காருண்யரே .

102 - யா முஹ்யித்தீன் யா கயாஸி -
( எங்களுக்கு ) உதவி செய்பவரே .

103 - யா முஹ்யித்தீன் யா ராஹத்தி -
( உங்கள் ) ஆனந்த வாழ்வே .

104 - யா முஹ்யித்தீன் யா பாலியல் ஹாஜாத்தி -
( எங்கள் ) விருப்பங்களை முழுமையாய் நிறைவேற்றுபவரே .

105 - யா முஹ்யித்தீன் யா பாரிஜ குர்பத்தி -
( எங்கள் ) கவலைகளை தீர்ப்பவரே .

106 - யா முஹ்யித்தீன் யா லியாயி -
ஒளி வெள்ளமே .

107 - யா முஹ்யித்தீன் யா ரஜாயி -
( எங்கள் ) நம்பிக்கை ஒளியே .

108 - யா முஹ்யித்தீன் யா ஷிபாயி -
ஆரோக்கியம் அளிப்பவரே .

109 - யா முஹ்யித்தீன் யா நூரஸ் ஸராயிர் -
ரகசியங்களின் ஒளியே .

110 - யா முஹ்யித்தீன் யா ஸாஹிபல் குத்ரத்தி -
வலிமை உடையவரே .

111 - யா முஹ்யித்தீன் யா வாஹிபல் அஸ்மத்தி -
உயர்வைத் தருபவரே .

112 - யா முஹ்யித்தீன் யா மாலிகஸ்  ஸமானி -
காலத்தின் அதிபதியே .

113 - யா முஹ்யித்தீன் யா அதனால் மகானி - கருவறையின் காவலரே .

114 - யா முஹ்யித்தீன் யா ஒஆரிச கிதாபல்லாஹி -
இறை வேதத்தின்  வாரிசே .

115 - யா முஹ்யித்தீன் யா வாரிசு ரசூலில்லாஹி -
 நபிகள் நாயகத்தின் வாரிசே .

116 - யா முஹ்யித்தீன் யா ஸிர்ரல் அஸ்ராரி -
ரகசியங்களின் ரகசியமே .

117 - யா முஹ்யித்தீன் யா கஅபத்தல் அப்ராரி -
நேர்மையாளார்களின் கருவறையே .

118 - யா முஹ்யித்தீன் யா ஷாஹிதல் அக்வானி பி நஜ்ரத்தின் -
ஒரே நேரத்தில் அண்ட சராசரங்களையும் காண்பவரே.

119 - யா முஹ்யித்தீன் யா குத்பல் பர்ரி வல் பஹ்ரி -
கடல் பூமி அனைத்திற்கும் அதிபதியானவரே .

120 - யா முஹ்யித்தீன் யா குத்பல் மஷ்ரிகி வங்ரிபி -
கிழக்கு மேற்கு அனைத்து திசைகளுக்கும் அதிபதியானவரே .

121 - யா முஹ்யித்தீன் யா குத்பஸ் ஸமாவாத்தி வல் அர்லீன் -
வானம் பூமி அனைத்திற்கும் அதிபதியானவரே .


யா அல்லாஹ் :-

அவர்களின் பொருட்டால் கிருபையுள்ள ரஹ்மான் நம் அனைவருக்கும் ஈருலக பாக்கியங்களையும் தந்து அல்லாஹூத ஆலாவின் திருப்பொருத்தத்தில் ஊரி திளைத்த உத்தமர்கள் திருக்கூட்டத்தில் நம்மையும் சேர்த்து அருள் பாலிப்பானாக...

ஆமீன் !     

Comments

Post a Comment

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்