எளிய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே... !!!

எளிய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே... !!!

 ஒரு அழகான பெண் திருமணம் செய்ய ஆசை பட்டது.. தன்னை திருமணம் செய்யக்கூடியவர் மிகவும் பக்தியுள்ள கணவராக இருக்க வேண்டும்.. அதாவது அவர் ஒவ்வொரு நாளும்...

 1- முழு குர்ஆனை ஓதி முடிக்க வேண்டும் 

 2 -  வருடம் முழுவதும் நோம்பு நோக்க வேண்டும் 

  3 - இரவு முழுவதும் அல்லாஹுவை நின்று வணங்க வேண்டும் 


மேற்கூறிய நிபந்தனையை ஏற்று கொள்ள கூடியவர், தன்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று அழைப்பிதழ் தந்தது.

இந்த அழகான பெண்ணை திருமணம் செய்ய பல நபர்கள் போட்டி போட்டு கொண்டு முன் வந்தார்கள், ஆனால் நிபந்தனையை கண்டு ஓட ஆரம்பித்து விட்டார்கள். 

ஒரு வாலிபர் முன் வந்து அனைத்து நிபந்தனைகளை என்னால் நிறைவேற்ற முடியும் என்று வாக்குறுதி தந்தார்.. அவருடைய வாக்குறிதியை ஏற்று பள்ளி இமாம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

முதல் இரவுக்கு பிறகு.... தன்னோட கணவன் வாக்குறிதிக்கு ஏற்ப எந்த நிபந்தனையும் செய்ய வில்லை.. அதாவது முழு குர்ஆனை ஓத வில்லை, நோம்பு நோக்க வில்லை, இரவு முழுவதும் அல்லாஹுவை நின்று வணங்கவும் இல்லை. கொஞ்சம் நாள் பொருத்து பார்க்கலாம், தன்னோட கணவன் மாறுவார என்று எதிர் பார்க்க, ஆனால் எதுவுமே அவரும் செய்ய வில்லை. எனவே தனக்கு விவாகரத்து வேண்டும் என்று அந்த பெண் புகார் கொடுத்தார்.

நீதிபதி முன்பு இருவரும் அழைத்து செல்ல பட்டார்கள்.

நீதிபதி: திருமணத்துடைய நிபந்தனைகள் என்ன?' 

வாலிபர்: தினசரி முழு குர்ஆனை ஓத வேண்டும், வருடம் முழுவதும் நோம்பு நோக்க வேண்டும்,இரவு முழுவதும் அல்லாஹுவை நின்று வணங்க வேண்டும். 

நீதிபதி: நீங்கள் அதை பூர்த்தி செய்தீர்களா ?? 

வாலிபர்: ஆம் 

 நீதிபதி: பொய் சொல்லுகிறீர்கள், நீங்கள் இவைகளை செய்ய வில்லை என்று தானே உங்கள் மனைவி புகார் கொடுத்து விவாகரத்து கேட்டுள்ளார்.

வாலிபர்: நான் அனைத்து நிபந்தனைகளை நிறைவேற்றி கொண்டு தான் இருக்கிறேன்..

நீதிபதி: தினசரி முழு குர்ஆனை ஓதுகிறீர்களா ??? எப்படி ???

வாலிபர்: நான் தினமும் சூரத்துல் இக்லாஸ் ஓதுகிறேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் தினமும் மூன்று முறை சூரத்துல் இக்லாஸ் ஒதுகிராரோ, அவர் முழு குர் ஆன் ஓதுவதற்கு சமம்.

நீதிபதி: சரி, வருடம் முழுவதும் எப்படி நோம்பு வைக்க முடியும் ???

வாலிபர்: நான் ரமதான் மாதம் முழுவதும் நோம்பு நோற்று ஷவ்வால் மாதத்தில் முதல் 6 நாட்கள் நோம்பை நோற்பேன்.. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் ரமதான் மாதம் முழுவதும் நோம்பு நோற்று ஷவ்வால் மாதத்தில் 6 நாட்கள் நோம்பு நோற்றால், அவர் வருடம் முழுவதும் நோம்பு வைப்பது போல் ஆகும்.

நீதிபதி: சரி, தினமும் இரவு முழுவதும் அல்லாஹுவை நின்று எப்படி வணங்க முடியும் . அதை சொல்லுங்க 

வாலிபர்: நான் தினமும் இஷா தொழுகையை பள்ளியில் ஜமாத்துடன் தொழுது வருவேன் மேலும் ஃபஜிர் தொழுகையும் பள்ளியில் ஜமாத்துடன் தொழுது வருவேன். 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் இஷா தொழுகையும் ஃபஜிர் தொழுகையும் ஜமாத்துடன் தொழுது வருகிறார்களோ, அவர் இரவு முழுவதும் அல்லாஹுவை நின்று வணங்கியது போல் ஆகும்.

இதை கேட்ட நீதிபதி, இருவரையும் பார்த்து கூறினார்கள், இந்த திருமணத்தில் தவறு எதுவும் இல்லை,, நீங்க இருவரும் சந்தோசமாக வாழுங்கள் என்று தீர்பளித்தார்..

இஸ்லாம் மார்க்கத்தை மிக எளிதாக பின்பற்றலாம், அதை அழகான முறையில் பின்பற்றி உண்மையான இஸ்லாமியனாக வாழுவோம். இன்ஷா அல்லாஹ் ...

எளிதாக பின்பற்ற கூடிய மார்க்கம் 
 இஸ்லாம் மட்டுமே...

Comments

Popular

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

குர்ஆனை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய கல்வி

ஈமானின் கிளைகள் ...!