சூரத்துல் பாத்திஹாவின் படி நாம் யாரிடம் உதவி கேட்கலாம்..

             சில ஹதீதுகள் இப்படியும்                                       வருகின்றன.!

            إذا سألت فاسأل الله واذا استعنت فاستعن بالله

 நீ எதையாவது கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேட்டுக்கொள். நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டே உதவிதேடு.

இந்த ஹதீதை வழிகெட்டவர்கள் புரியாமல் அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி கேட்கக் கூடாது என்பதற்கு ஆதாரமாக எடுத்துப் பேசுகிறார்கள். இது ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தன்னிடம் கேள்வி கேட்டு வருபவர்களின் ஆன்மீக நிலையைப் பொறுத்து சொல்லும் பதில்கள்.

உங்களுக்குத் தெரிந்திருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து 

                       اي العمل افضل 

"அமல்களில் சிறந்தது எது" என்று கேட்கிறார். அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள்..

الصلاة اول وقتها "தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது" என்று பதிலளித்தார்கள்.

இன்னொருவர் வந்து :-

                          اي العمل افضل 

என்ற அதே கேள்வியை கேட்டார். அதற்கு அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள்...

                         بر الوالدين 

"பெற்றோருக்கு நன்றி உள்ளவனாய் இருப்பது" என்று சொன்னார்கள்.

இன்னொருவர் வந்து :-

                           اي العمل افضل

 என்ற அதே கேள்வியை கேட்டார்.

அதற்கு அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள்         ..

               الجهاد في سبيل الله 


"அல்லாஹ்வுடைய பாதையில் யுத்தம் செய்வது" என்று சொன்னார்கள். 

ஒரே கேள்விதான் மூன்று விதமான பதில் அளிக்கப்பட்டது. வந்தவர்களின் மனநிலை அறிந்துதான் பதில் சொன்னார்கள் நபி பெருமான் (ஸல்) அவர்கள். மூவரது நடத்தையையும் அவர்களில் இருந்த குறையை அறிந்து உணர்ந்த நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களுக்கேற்ற மருந்தைக் கொடுத்தனுப்பினார்கள்.

ஆரம்பத்தில் கூறப்பட்ட அந்த ஹதீது சொல்லப்பட்டவர் அல்லாஹ்வை மிக நெருங்கிய நிலையில் இருந்தார்.

 அவர் அவனல்லாத யாரிடமும் கேட்கமுடியாது அதனால்தான் அவ்வாறு பதிலளித்தார்களே ஒழிய.

இது பொதுவாக மற்றவர்கள் யாரிடமும் கேட்கக் கூடாது என்பதற்காக சொல்லப்பட்டதல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்.

நம்ரூத் இப்றாஹீம் நபியை நெருப்பிலே இட்ட சமயம்;

ஜிப்ரயீல் (அலை) வந்து உமக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டபோது, நபி இப்றாஹீம் (அலை)

                         اما اليك فلا

 "இந்த கட்டத்தில் உன்னிடம் எதுவும் தேவை இல்லை" என்று சொன்னார்கள்.

குர்பிய்யத் உடைய (அல்லாஹ்வை மிக நெருங்கிய) நிலையிலே  இருந்த காரணத்தினால் அவனல்லாத யாரிடமும் கேட்க முடியாது அதனால்தான் இப்றாஹீம் நபி (அலை) அவ்வாறு சொன்னார்கள். 

ஆகவே இவை அனைத்திலும் நிலை அறிந்து பதில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியும்.

எனவேதான் சூரத்துல் பாத்திஹாவின் படி நாம் யாரிடம் உதவி கேட்டாலும் அவரையும் அல்லாஹ்வுடைய வெளிப்பாடு, அவனேதான் இவனாக வந்துள்ளான் என்ற உணர்வோடு கேட்டோமானால் பாவமாக ஆகாது.

இல்லாமல் சிருஷ்டி இடத்திலே உதவி தேடுவதாய் எண்ணி இவன் உதவி தேடினால் அது பாவமாக வாக்கிற்கு மாறாக அமைந்துவிடும். அல்லாஹ் குற்றம்பிடிப்பான்.

சிலர் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் வலீமார்களிடம் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டு ஏனைய அடியார்களிடம் உதவி கேட்டே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் .

ஆகவே அறியாமையை களைந்து மார்கத்தில் தெளிவு பெறுவோமாக...

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்