அம்பா நாயகம் ..
அம்பா நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ...
மகான் அம்பா நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின். தந்தை அல் ஆலிமுல் பாழில் வல் ஆரிபுல் வாஸில் முஹ்ம்மத் ஸயீத் ஜல்வத் நாயகம்
( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆவார்கள்.
இவர்கள் கீழக்கரை அறூஸிய்யஹ் மத்ரசாவில் சமாதி கொண்டு பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் கல்வத் நாயகம் அவர்களின் சீடரும் கலீபாவும் ஆவார்கள்...
கல்வத் நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு இருவர் கலீபாக்கள் உள்ளனர் . அவர்களில் ஒருவர் மகான் அவர்களின் முஹம்மத் ஸயீத் ஜல்வத் நாயகம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள் மற்றவர் மேலைப்பாளயத்தில் கொண்டுள்ள சங்கைக்குரிய யுஸுப் நாயகம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள்...
மகான் அவர்களின் தந்தை முஹம்மத் ஸயீத் ஜல்வத் நாயகம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள் திரு மக்கா சென்று “ஹஜ்” வணக்கத்தை முடித்து விட்டு தங்களின் தாயகம் வந்த போது .
தங்களின் குரு கல்வத் நாயகம் ( ரலியல்லாஹூ அன்ஹூ )அவர்களின் கட்டளைப்படி கம்பத்தில் தொடராக பன்னிரண்டு ஆண்டுகள் “கல்வத்” இருந்து இறையடி சேர்ந்தார்கள். இவர்களி்ன திருச்சமாதி கம்பத்தில் இவர்களின் தைக்காவிலேயே உள்ளது.
அம்பா நாயகம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்களின்
திருப்பெயர் அப்துர் றஹ்மான். இவர்கள் அம்பா நாயகம் என்றும் கம்பம் ஹஸ்றத் என்றும் பிரசித்தி பெற்றிருந்தார்கள்.
இவர்களும் தங்களின் தந்தை போல் குறித்த தைக்காவில் இருபத்தைந்து ஆண்டுகள் கல்வத் இருந்து ஹிஜ்ரி 1420 ஜுமாதுல் ஆகிறஹ் மாதம் பிறை மூன்றில் சுமார் 72 வயதில் தாறுல் பனாவை விட்டும் தாறுல் பகாவுக்குச் சென்றார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். இவர்களும் தங்களின் தந்தைக்கு அருகில் துயில் கொள்வது குறிப்பிடத்தக்கது....
கூறு கெட்ட கூட்டம்
ReplyDelete