தக்லீது என்றால் என்ன..?
தக்லீது - இமாம்களை பின்பற்றுதல்....!!!
தக்லீது என்பதற்கு
" கழுத்தில் மாலையிடுதல் " என்பது பதப் பொருள்.
'" ஒருவரை நமப்பி அவர் சொல்லை ஆதாரம் கேட்காமல் பின்பற்றுவது "அதன் மரபுப் பொருள்.
கவனிக்க! தக்லீது என்பது ஒருவர் சொல்லை ஆதாரம் இல்லாமல் பின்பற்றுதல் அல்ல. ஆதாரம் கேட்காமல் பின்பற்றுவதற்குப் பெயராகும்.
இப்படி ஆதாரம் கேட்காமல் தக்லீது செய்வதற்கு ஆதாரம் இருக்கின்றதா...? என்றால் ....இருக்கிறது ..!!!
ஸஹாபாக்கள் மார்க்கச் சட்ட விளக்கம் கூறும் பொழுதெல்லாம் அதன் ஆதாரங்களையும் சேர்த்தே கூறியதற்கு ஹதீஸ் சாட்சியங்கள் இல்லை.
சில சமயம் ஆதாரம் ஏதும் கூறாமல் வெறும் சட்ட விளக்கம் மட்டும் செய்துள்ளனர்.
புகாரி பாகம் இரண்டில்' ஒரு ஹதீஸ் இப்படி வருகிறது.
( அறிப்பவர்: அஸ்லது இப்னு யஸீது ரலியல்லாஹு அன்ஹு )
'முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (மதப்)போதகராக(வும்), மதக்கட்டளைகளை ஏவக் கூடியவராக(வும்) எங்கள் எமன் தேசத்திற்கு வந்தார்கள்.
அப்போது நாங்கள் அவரிடம் 'ஒரு மகளையும், ஒரு சகோதரியையும் விட்டுவிட்டு இறந்துவிட்ட ஒரு மனிதரைப்ப ற்றி (அவரின் சொத்து பங்கீடு விகிதம் பற்றி) கேட்டோம்.
விட்டுச் சென்ற சொத்தில் ஒரு பாதி மகளுக்கும் மறுபாதி சகோதரிக்கும் என்று தீர்ப்பளித்தார்கள்.
முஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்தத் தீர்ப்பு ரஸூலுல்லாஹி ஸல்'லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜீவிய காலத்தில் வழங்கப்பட்டதாகும்.
(பக்கம் 998)
இந்த ஹதீதிலிருந்து தெரிய வரும் உண்மைகளாவன:
1.தக்லீது ரஸூலுல்லாஹ்வுடைய காலத்திலும் இருந்திருக்கிறது.
2.குர்ஆன் ஹதீஸை ஆராய்ந்து அதிலுள்ள சட்டங்களை சுயமாக விளங்கமுடியாதவர்கள் மார்க்க ஞானமுள்ளவர்களிடம் கேட்டு அவர்கள் சொல்வதைப் பின்பற்ற வேண்டும்.
3.சட்டம் சொல்பவர் நம்பிக்கைக்குரியவராக இருப்பின் அவரிடம் அதற்காகன ஆதாரம் கேட்காமலும் அவர் மேலுள்ள நம்பிக்கையில் அவரின் சொல்லைப் பின்பற்றலாம்...
Comments
Post a Comment