குர்ஆனை பற்றி தெரியது கொள்ள வேண்டிய கல்வி பாகம் : 1
இஸ்லாமிய கேள்வி பதில் ..!!!
பாகம் : 1
குர்ஆனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய கல்வி :
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும்?
பதில் :
فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98)
فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98)
மற்றும்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றும் (96:1) கூற வேண்டும்.
2) திருக்குர்ஆன் யாரிடமிருந்து இறங்கியது?
பதில் :
அல்லாஹ்விடமிருந்து இறங்கியது..
3) திருக்குர்ஆன் யார் மூலம் இறங்கியது?
பதில் :
ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) மூலம் இறங்கியது.
4) திருக்குர்ஆன் யாருக்கு இறங்கியது?
பதில் :
ஹழ்ரத்முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இறங்கியது..
5) திருக்குர்ஆன் எந்த இடத்தில் இறங்கியது?
பதில் :
ஹிரா என்னும் மலைக் குகையில் இறங்கியது
6) திருக்குர்ஆன் எந்த மொழியில் இறங்கியது?
பதில்
அரபி மொழியில் இறங்கியது.
7) திருக்குர்ஆனில் முதன்முதலாக இறங்கிய வசனம் எது?
பதில் :
(بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ * خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ * الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ * عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ)
இக்ரஹ் என்னும் வசனம் ஆகும்.
8) திருக்குர்ஆன் எதற்காக வேண்டி இறங்கியது?
பதில் :
மனித, ஜின் வர்க்கத்திற்கு நேர்வழி காட்டுவதற்காகஇறங்கியது.
9) திருக்குர்ஆனின் திருப்பணி என்ன?
பதில் :
நன்மையை ஏவுவதும், தீமையை தடுப்பதும் ஆகும்.
10) திருக்குர்ஆனில் அல்லாஹ் என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?
பதில் :
2698 இடங்களில்.
11) திருக்குர்ஆனில் 'ரப்பு' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?
பதில்:
151 இடங்களில்.
12) திருக்குர்ஆனில் 'ரப்புல் ஆலமீன்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?
பதில் :
42 இடங்களில.
13) திருக்குர்ஆனில் உள்ள பெரிய சூரா எது?
பதில் :
சூரா அல்பகரா.
14) திருக்குர்ஆனில் உள்ள சிறிய சூரா எது?
பதில் :
சூரத்துல் கவ்ஸர்.
15) திருக்குர்ஆனில் உள்ள நீண்ட வார்த்தை எது?
பதில் :
ஃபஅஸ்கைனாகுமூஹூ, வல்யஸ்தக்லி ஃபன்னஹூம்
11எழுத்துக்களை கொண்டவை.
11எழுத்துக்களை கொண்டவை.
16) திருக்குர்ஆனில் (சூரா ஆரம்பமின்றி) உள்ள சிறிய வசனம் எது?
பதில் :
அல்முத்தஸ்ஸிர் அத்தியாயத்தில் உள்ள'சும்ம நழர' என்றவசனம்.
17) திருக்குர்ஆனில் தான, தர்மம் பற்றி எத்தனை இடங்களில் வருகிறது?
பதில் :
150 இடங்களில்.
18) சில சூராக்களில் ஆரம்பத்தில் (அலிஃப்,லாம், மீம்) போன்று துவங்கும் எழுத்துகளுக்கு என்ன பெயர் கூறப்படும்?
பதில் :
ஹூருஃபே முகத்த ஆத் என்று கூறப்படும்.
19) ஹூருஃ பே முகத்த ஆத் எழுத்துக்கள் எத்தனை?
பதில் :
14 எழுத்துக்கள்.
20) ஜூஸ்வு என்றால் என்ன?
பதில் :
பாகம் என்று பொருள்..
தொடரும்.... இரண்டாம் பாகம் ...!!!
Comments
Post a Comment