சதாகாலமும் எல்லா நிலைகளிலும் நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் மீது அதிகம் அதிகம் ஸலவாத் ஓதிவருவது அவசியமாகும்.

எல்லா நிலைகளிலும் அதிகம் ஓத வேண்டிய (அற்புதம்) ஸலவாத்...!


ஒவ்வொரு முஸ்லிமானவரும் அவரால் முடிந்த அளவு சதாகாலமும் எல்லா நிலைகளிலும் நபிகள் நாயகம்  (ﷺ) அவர்களின் மீது அதிகம் அதிகம் ஸலவாத் ஓதிவருவது அவசியமாகும். 

ஏனென்றால் அதிகமான ஸஹாபாப் பெருமக்கள் யா ரசூவ்லுல்லாஹ்! தங்களுக்காக எங்களின் எல்லா நேரங்களையும் ஸலவாத்திற்காக ஒதுக்கலாமா? என்று வேண்டிய போதெல்லாம் ‘அவ்வாறு நீங்கள் ஓதினால் உங்கள் இம்மை, மறுமை கவலைகளுக் (களைவதற்)குப் போதுமானதாகும்’ என்றே பதிலளித்துள்ளார்கள்...!!!

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் رضي الله عنه அவர்கள், பேசுகிற சபையாயினும், விருந்து உண்ணும் சபையாயினும் அதில் அல்லாஹ்வின் புகழையும், பெருமையையும் எடுத்துக் கூறி, ஸலவாத் ஓதியதின் பின்புதான் பேசத்துவங்குவார்கள். அந்த சபையானது கடைவீதியில் உள்ள இறை சிந்தனையே இல்லாத சபையாயினும் சரியே. (நூல் – முஸ்னத் அபீஷைபா).

எங்கும் எல்லா இடத்திலும் அல்லாஹ்வின் திக்ரும் நபிகள் நாயகம்  (ﷺ) அவர்களின் ஸலவாத்தும் ஓதப்பட வேண்டுமென்பதை உணர்த்துவதற்காகவும், கற்றுத்தருவதற்காகவும் இவ்வாறு இப்னு மஸ்ஊத் رضي الله عنه அவர்கள் ஓதிக் காட்டுவார்கள்....!!!

சுப்யானுத்தவ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள் : 

“நான் ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்தேன். அங்கு எங்களுடன் ஓர் இளைஞரும் இணைந்து கொண்டார். அவர் ஒவ்வொரு கால் அடி எடுத்து வைக்கும்போது அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலிமுஹம்மதின் என்று ஸலவாத் ஓதிக் கொண்டேயிருந்தார்.

அந்த இளைஞரிடம் நீர் (ஸலவாத்தின் பெருமையைத்) தெரிந்து கொண்டுதான் ஒதுகீறீரா? என்று கேட்டேன். 

எனது பெயரைக்கேட்டு என்னை   இன்னார்  அதாவது சுப்யானுத்தவ்ரீ என்று தெரிந்து கொண்ட பின் அதற்குரிய விபரத்தை  இளைஞர் கூறும் முன் என்னிடம் ‘அல்லாஹ்வைப் பற்றி எதை நீங்கள்   அறிந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்க இரவினைப் பகலிலும், பகலினை   இரவிலும் நுழையவைப்பவனும், கருப்பையில் உயிருள்ளதாக குழந்தையை உருவாக்கிக் கொடுப்பவனும் அல்லாஹ்! என்றேன்.

அதற்கு அந்த இளைஞர், “சுப்யான்! நீங்கள், அல்லாஹ்வை அறிய வேண்டிய அளவுக்கு அறியவில்லை” என்றார்..!!.      
    
 அந்த இளைஞரிடம் “நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி எவ்வாறு அறிந்திருக்கிறீர்கள்?” என்று நான் கேட்கவும், 

அந்த இளைஞர், “மனிதன் விரும்பியவற்றைச் செய்து முடிக்க வேண்டுமென்றே ஊக்கத்தையும் அவனது வைராக்கியத்தையும் உடைப்பவன் அல்லாஹ்!” (தான் விரும்பியவற்றைச் செய்து முடிப்பவன் அல்லாஹ்) என்றார். 

மீண்டும் நான் அந்த இளைஞரிடம் அவரது ஒவ்வொரு காலடி எடுத்து வைக்குபோதும் அவர் ஸலவாத் ஓதுவதற்குரிய காரணம் கேட்டேன். அதற்கு அந்த இளைஞர் பதிலளித்தார், “ஹஜ் செய்வதற்காக எனது வயது முதிர்ந்த தாயாருடன் வந்தேன்...!!!

 பைத்துல்லாஹ்வினுள் எனது தாயாரை அழைத்து வந்தேன். எனது தாயாரின் வயிறு வீங்கி விட்டது. முகம் கருத்துப்போய் விட்டது, வலியும் வேதனையும் கடுமையாகிவிட்டது. நானோ (மனம் நொந்துபோனவனாக) என் தாயின் அருகில் அமர்ந்து கொண்டு எனது இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தியனாக ‘யா அல்லாஹ்! உனது பைத்துல்லாஹ்விற்கு வந்தவர்களிடம் (சிரமத்தைத்தான்) கொடுப்பாயோ? என்று துஆ செய்து கொண்டிருந்தேன். 

அப்போது ‘திஹாமா’ திசையிலிருந்து மேகம் விலகியது. வெள்ளை ஆடை அணிந்த ஒரு மனிதர் கஅபாவினுள் நுழைந்தார். எனது தாயின் அருகில் வந்த அவர், அவரது கரங்களினால் எனது தாயாரின் முகத்தையும், வயிற்றையும் தடவினார்..!!   

 அவ்விரண்டுமே வெண்மையாகி, நோய் நீங்கி வலியும், வேதனையும் இல்லாமல் போய்விட்டது. அந்நபரும் அவ்விடத்திலிருந்து செல்லத் துவங்கினார். 

அவரது ஆடை முந்தானையைப் பிடித்த வண்ணம் “எனது சிரமங்களை நிவர்த்தி செய்த தாங்கள் யார்?” என்று வினவினேன். அப்போது அவர் ‘நான் உங்கள் நபியாகிய முஹம்மது (ﷺ)’ என்றார்கள்...!!!            
     
 உடனே, யா ரசூவ்லுல்லாஹ்! ஏதாவது சொல்லித் தாருங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ﷺ) அவர்கள் கருணை மொழி கூறினார்கள். 

ஒவ்வொரு காலடி எடுத்து வைக்கும்போதும் அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலிமுஹம்மதின்’ என்று ஓதுவீராக!”

( சஹாபாக்கள் சரித்திரம்)


Comments

Popular

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

கலிமாவின் விளக்கம்...

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

அம்பா நாயகம் ..