சோதனைகளுக்கு காரணம் ...!!!

 சோதனைகளுக்கு காரணம் ...!!!

பாவங்களை நீக்குவதற்கான வழிகள் ..!

قال رسول الله صلى الله عليه وصلم من يردالله به خيرا 
صب منه. رواه مالك والبخاري كدا فى الترغيب

ஃபிரஅவ்னுக்கு 500 வருடமாக தலைவலி கூட வந்ததில்லை. அதனால் தான் அவன் கர்வம் கொண்டான். அந்த கர்வம் வராமல் நம்மைக் காப்பாற்றி நம்மைப் பக்குவப்படுத்துவதற்குத் தான் நமக்கு சோதனைகளை அல்லாஹ் தருகிறான்.

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ

"உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனைகள் அவை உங்கள் கரங்கள் சம்பாத்ததின் காரணமாக ஏற்பட்டவை" அல்குர்ஆன். [42 ; 30]

"ஒருவன் காணாமல் போன ஒரு பொருளைத் தேடுவதும் அவன் பாவத்திற்குப் பரிகாரமாகும்" {நபிமொழி}

அழுக்கைப் போக்குவதற்கு நாம் சோப்பை பயன் படுத்துகிறோம். பலவகையான அழுக்குகள் இருக்கிறது.அதே போன்று சோப்புகளும் பல வகையாக இருக்கிறது. துணி துவைக்க ஒரு சோப்பு.உடலை சுத்தம் செய்வதற்கு ஒரு சோப்பு.பாத்திரத்தைக் கழுவுவதற்கு ஒரு சோப்பு.
அதுபோல நம் பாவங்கள் பல வகையாக இருக்கிற காரணத்தினால் அதை நீக்குவதற்கும் அல்லாஹ் பல வகையான சோதனைகளைத் தருகிறான்.

"சில பாவங்களை நீக்குவதற்கு அல்லாஹ் குடும்பக் கவலைகளைக் கொடுப்பான்.குடும்பக் கவலைகள் தான் அந்தப் பாவங்களை நீக்க முடியும்" {நபிமொழி}

துருவை நீக்குவதற்காக இரும்பை நாம் நெருப்பில் போடுகிறோம். அதேபோன்று நமது பாவங்களை நீக்குவதற்காக சில சோதனை எனும் நெருப்பிலே அல்லாஹ் இடுகிறான்.

தவறு செய்யும் மாணவனை ஆசிரியர் கண்டிப்பதும் அவனை  கொண்டல்ல.மாறாக அவனைத் திருத்துவதற்காக.பெற்றோர்கள் பிள்ளைகளை தண்டிப்பது அவர்களைத் திருத்துவதற்காகத் தான். அப்படி தண்டிக்க வேண்டும்.இல்லையென்றால் அவர்களுக்கு பிள்ளைகளின் மீது அக்கறை இல்லை என்று அர்த்தம்.

அதுபோன்று நம்மின் மீது அல்லாஹ்வுக்கு இரக்கம் இருப்பதினால் தான் நமக்கு சோதனைகளைத் தருகிறான். எனவே சோதனைகள் என்பது அல்லாஹ்வின் கோபத்திற்கு அடையாளம் அல்ல. அவனது கருணைக்கு ஆதாரம்....


Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

இமாம் திர்மிதி. ( ரஹ்மதுல்லாஹி அலைஹி )