நாம் குழப்பம் நிறைந்த ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .

நீங்கள் தான் பொருப்பாளர்கள் !!!

 நாம் குழப்பம் நிறைந்த ஒரு கால கட்டத்தில்  வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .

 தரீக்காவைப் பற்றி   இன்னும் இறை நேசர்களை பற்றி இன்னும் பையத்தை பற்றி விவாகரம் செய்யக் கூடிய ஒரு கால கட்டத்தில் இருக்கிறோம் ! 

தரீக்கா சம்மந்தமான ஈடுபாடுகளை குறித்து கொச்சைப்படுத்துகிற கால கட்டத்தில் இருக்கிறோம் ! இது மாத்திரம் அல்ல இதற்க்கு முன்பும் நம் சமூகத்தில் இந்த குற்றச் சாட்டுகள் இருக்கிறது , இப்போதும் இருக்கிறது ஆனால் முன்பை விட அந்த பழிச்சொல்லும் , அவச் சொல்லும் , மிக அதிகமாக இருக்கிறது .

அந்த அவச் சொல்லுக்கும் ,பழிச் சொல்லுக்கும் தரீக்காக்கள் காரணம் அல்ல ! இந்த அவச் சொல்லுக்கும் , பழிச் சொல்லுக்கும் இறை நேசர்கள் காரணம் அல்ல !! இந்த அவச் சொல்லுக்கும் , பழிச் சொல்லுக்கும் ஷைகு மார்கள்  காரணம் அல்ல !! இந்த அவச் சொல்லுக்கும் , பழிச் சொல்லுக்கும் பையத்துகள்  காரணம் அல்ல !

தரீக்கா என்ற பெயரில் நடக்கின்ற போலிதனம் தான் அதற்கு காரணம் . இறை நேசர்கள் என்ற பெயரில் நடக்குகிற போலிதனம் தான்அதற்கு காரணம் . ஷைகு மார்கள் என்ற பெயரில் நட்க்குகிற போலித்தனம் தான் அதற்கு காரணம் .

 பையத் என்ற பெயரில் நடக்குகிற போலித்தனம் தான்அதற்கு  காரணம் . 

எனவே !!! எந்த எந்த வகையிலெல்லாம் தரீக்காவின் பெயரில் போலிகளும் , தவறுகளும் நடக்கிறது .

எந்த எந்த வகையிலெல்லாம் ஷைகு மார்களின் பெயரில் போலிகளும் , பிழைகளும்  நடக்கிறது .

என்பதைப் பற்றி பரீசிலித்து அவற்றைக் களைவதற்க்கு  தரீக்காவில் ஈடுபாடு உள்ள மக்கள் [ நாம் ] அக்கரையும் ,பொறுப்பும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி  அக்கரையும்,பொறுப்பும் ,எடுத்துக் கொண்டு உண்மையில் நம்முடைய நிலையில் இருந்து இது போன்ற குற்றங்கள் நடந்தால் ,பிழைகள் நடந்தால், தவறுகள் நடந்தால் , அவற்றை முற்றிலுமாகக் களைந்து தரீக்கா தன் தரத்தில் நிலைத்து நிற்ப்பதற்க்கு ஷைகு மார்களின் ,இறை நேசர்களின் கண்னியம் மரியாதை காப்பாற்றப் படுவதற்க்கும் ,தரீக்காவில் உள்ளவர்களான நாம் மிகுந்த ஈடுபாடோடு ,மிகுந்த அக்கறையோடு , மிகுந்த பொறுப்போடு ,கடமையை செய்யும் பொறுப்பும் ,அக்கரையும் ,நமக்கு இருக்கிறது.

ஏதோ நாம் தரீக்காவில் இருக்கிறோம் என்பதோடு நமது கடமை முடிந்து விடக்கூடாது !! 

நமக்கென்று தனிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டால் நாம் எப்படி கிளர்ந்து எழுவோமோ , எப்படி  நமக்கென்று அவச் சொல் வந்தால் ஆர்ப்பரித்து எழுவோமோ அப்படி நம்மின் மீது இல்லாத குற்றச் சாட்டு வந்தால் 

நாம் எப்படி வீழ் கொண்டு எழுவோமோ அதுபோல தரீக்கா சம்மந்தமான போலிகள் & குற்றச் சாட்டுகள் வருகின்றபோது ,தரீக்கா சம்மந்தம்மாக அவச் சொல் ,பழிச் சொல் உண்டாகும் போது அவற்றைக் களைவதற்க்காக முயற்றியில் தரீக்காவில் உள்ள நாம் தான் ஈடுபடவேண்டும் .

 அது  நம்முடைய கடமை என்பதையும் நாம் நினைக்க வேண்டும் நாளை கியாமத் நாள் அன்று இறைவனிடத்தில்  நம்மை பார்த்து இப்படி சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள் அதாவது இறைவா ! இவர்களுக்கு தெரியும் நாங்கள் தவறான வழியில் செல்கிறோம் ஆனால் அதை இவர்கள் பார்த்தும் எங்களை நேர்வழி படுத்த வில்லை ? என்று முறையிட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லுவிர்கள் ? ! நம்முடைய ஸஹாபாகள் ,இமாம்கள் ,இறை நேசர்கள் ,ஷைகுமார்கள் , எந்த வழியில் நமக்கு வழி நடத்திக் காட்டினார்களோ அந்த பாதைக்கு மற்றமாக வழிகேட்டை யார் காட்டினாலும் அவர்களை பற்றி  நம் முடைய சமூகத்தில் அவர்களை பற்றி எச்சரிக்கைசெய்வது  நம் கடமை பொறுப்பு

 ஏன் என்றால் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் கூறிவுள்ளார்கள் : உங்களில் ஒவ்வொருவர்களும் ஒரு பொறுப்புதாரி அவர் அவர் பொறுப்பை பற்றி கேட்கப் படும் 

எனவே மக்களுக்கு எச்சரிக்கை செய்வது நம்முடைய பொறுப்பு என்பதை நாம் ஒவ்வொருவரும் மறந்து விடக்கூடாது . 

Comments

Popular

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

ஈமானின் கிளைகள் ...!

அஹ்லே பைத்துகள் சிறப்பு

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்