முரீதானவர் பின்பற்ற வேண்டிவைகள்...!!!

ஒரு ஷைகிடம் முரீதானவர்  பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள்:

1. அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளல் வேண்டும்.

2. ஷைகிற்கு முற்றிலும் கீழ்படிந்து நடத்தல் வேண்டும்.

3. ஷைகின் பேரில் முஹப்பத்தில் மூழ்க வேண்டும். முரீது ஜெயம் பெறுவதற்கு அடையாளம் மற்றவர்களை பார்க்கிலும் தன் ஷைகையே தெரிந்து அவரை நேசிப்பதும், அவர் சொல்வதை மனமுவந்து கேட்டு நடப்பதும், அவரோடு எல்லா கருமங்களிலும் இணங்கி நடப்பதுமாகும்.

4. தரீகத்தின் அதபுகளை பேணி நடத்தல் வேண்டும்.

5. தொழுகையே முறையாக பேணி தொழல் வேண்டும் .

6. ஷரீஅத்தின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

7. எப்போதும் பணிவோடு நடத்தல் வேண்டும்.

8. ஷைகினால் முரீதுக்கு தரப்பட்ட திக்ரு, வளீபாக்களை தவறாமல் ஓதி வர வேண்டும்.

9. முராக்கபாவை நியமமாக செய்து வர வேண்டும். 

10. ஒரு முரீது ஷைகிடம் தேவை இல்லாத பேச்சுக்களை பேசுவதை விட்டும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். 

11. ஷைகிற்கு முன்பாக அதபு குறைவாக நடத்தல் கூடாது.

12. ஷைகிடம் தனது சக ஆத்மீக சகோதரர்களின்  குறைகளை கொண்டு செல்லல் கூடாது. தனது சக ஆத்மீக சகோதரர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளல் வேண்டும். 

13. ஷைகிற்கு பிடிக்காத காரியங்களை முரீது செய்வதை விட்டும் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

14. எப்போதும் ஷைகின் துவாவை எதிர்பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்

15. நல்ல குணங்களை கொண்டு உங்கள் கல்பை சுத்தபடுத்த வேண்டும்.

16. அதிகமதிமாக சலவாத் ஓதல் வேண்டும். 

17. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், வலீமார்களின் மீதும் அளவுகடந்த அன்பு வைக்க வேண்டும்.

18. முரீது ஷைகிடம் பைஅத் வாங்கிய சமயம்  தனது ஷைகினால் தனக்கு வழங்கப்பட்ட தரீகாவின் சில்சிலா கிதாபை (ஷஜரா கிதாப்) முறையாக ஓதல் வேண்டும். மேலும் சில்சிலா கிதாபை தனது இறுதி மூச்சி வரை உங்களோடு பாதுகாத்து  வைத்து கொள்ள வேண்டும்.

19. அதிகம் அதிகமாக ராத்திப் மஜ்லிஸ், சலவாத் மஜ்லிஸ், மௌலிது மஜ்லிஸ் போன்றவைகளில்  கலந்து கொள்ள வேண்டும்.

20. ஹராமான உணவுகளை உட்கொள்ளுதலை விட்டும் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ளல் வேண்டும்.

வல்ல ரஹ்மான்  ஷைகுமார்களின் பொருட்டால் நம்மனைவருக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்!



Comments

Popular

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

கலிமாவின் விளக்கம்...

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

அம்பா நாயகம் ..