ஷைத்தானாகவே ஆகிவிடாதீர்கள்..!!

ஷைத்தானுடன் போரிடுங்கள்...!!

ஆனால் ஷைத்தானாகவே ஆகிவிடாதீர்கள்.

ஷைத்தான் யார்? 

‘நான், எனக்கு, என்னுடையது’ என்கிற சிந்தனையின் வடிவம்தான் ஷைத்தான். 

ஆதமுக்கு முன்னால் ஸஜ்தா செய் எனச் சொல்லப்பட்ட போது அவனைத் தடுத்து நிறுத்தியதும் ‘நான், எனக்கு, என்னுடையது’ என்கிற சிந்தனைதான். 

தவறு இழைத்துவிட்ட பிறகும் அதனை அவனால் உணர முடியாமல் போனதற்குக் காரணமும் அந்தச் சிந்தனைதான். 

அதற்கும் மேலாக ‘ஆதமோ வெறும் மண்ணு; நானோ நெருப்பு’ என தன்னுடைய செயலுக்கு சால்ஜாப்பு சொல்ல வைத்ததும் அந்தச் சிந்தனைதான். 

அதனால் தான் அவன் சபிக்கப்பட்டவன் ஆனான். 

இப்போது முகநூல் பக்கத்திலிருந்து கண்களை விலக்கி,
சற்றே யோசித்துப் பாருங்கள்...
உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்...
‘நான், எனக்கு, என்னுடையது’ என்கிற எண்ணம் உங்களின் மனத்தில் வேரூன்றி இருக்கின்றதா? உங்களின் செயல்களில் பிரதிபலிக்கின்றதா? உங்களின் அன்றாட வாழ்வில் கோலோச்சுகின்றதா? 

இல்லை என்றால் அல்ஹம்துலில்லாஹ்.
இருக்கின்றது எனில் அந்த எண்ணத்தை இன்றே அகற்றி வீசி எறியுங்கள்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஷைத்தானின் வலைகளில் விழுவதிலிருந்துக் காப்பாற்றுவானாக!

ஆமின்.


Comments

Popular

அரஃபா நோன்பின் சிறப்பு :

குர்பானி எப்போது கடமையாகும் ?

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

நபி இப்ராஹிம் [ அலை ] அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள் என்ன!!

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

குர்பானி & உழ்ஹிய்யா பற்றிய தெளிவான விளக்கம்...

குர்பானி ஏன் ? எதற்க்கு ?