புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் விளக்கம் :-
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமை ஹஜ்ஜூ.....!!!
அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ]
புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல்
விளக்கம் :-
விளக்கம் :-
இதோ உங்களுக்காக :
இறைவன் கூறுகிறான் :
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ
سَبِيلاً
யாருக்கு ஹஜ் செய்ய சக்தி இருக்குமோ அவர்கள் மீது ஹஜ் கடமையாக இருக்கும் [ 3=97 ]
سَبِيلاً
யாருக்கு ஹஜ் செய்ய சக்தி இருக்குமோ அவர்கள் மீது ஹஜ் கடமையாக இருக்கும் [ 3=97 ]
رُوي عن النَّبي -عليه الصَّلاة والسَّلام- قوله: (مَن حجَّ للهِ، فلم يَرفُث ولم يَفسُقْ، رجَع كيوم ولدَته أمُّه).[٩
நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
எவர் ஹஜ்ஜூ செய்து ஹ்ஜஜூக்கு பாதகமான காரியங்கள் செய்யாமலும் , வீணான வார்த்தைகள் பேசாமலும் , இருக்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போல் ஆவார் ,
[ அறிவிப்பாளர் = அபூஹூறைரா [ ரலியல்லாஹூ அன்ஹூ ]
[ நூல் = புகாரி =1819 ]
ஹஜ்ஜின் முதல் நாள் = 1 [ அதாவது ] துல் ஹஜ் பிறை = 8 <> [ மினாவில் ]
> இஹ்ராம் உடைய நிலையில் மினாவில் தங்குதல்.
> லுஹர் , அஸர் , மஃரிப் , மற்றும் இஷா , தொழுகையை நிறைவேற்றுதல் .
> இரவு மினாவில் தங்குதல்.
ஹஜ்ஜின் இரண்டாம் நாள் =2
[ அதாவது ] துல் ஹஜ் பிறை = 9 <>
மினா & அரஃபா
> மினாவில் இன்று ஃபஜர் தொழுகையை நிறைவேற்றுதல்
> சூரியன் உதயமானதற்கு பின் அரஃபாவிற்க்கு புறப்ப்டுதல்
> சூரியன் நடு உச்சியில் அடைந்த
நேர முதல் சூரியன் மறையும்
நேரம் வரை அரஃபாவில் தங்குதல் ,
> அரஃபாவில் இன்று லுஹரும் ,
அஸரும் நிறை வேற்றுதல்..
> சூரியன் மறைந்த பின் அரஃபாவில் மஃகரிப் தொழுகை நிறை வேற்றாமல் முஜ்தலிஃபாவிற்கு புறப்படுதல்.
> முஜ்தலிஃபாவில் இஷா வுடைய நேரத்தில் மஃகரிபும் ,இஷாவும் நிறைவேற்றுதல் .
> இரவு முஜ்தலிஃபாவில் தங்குதல் .
ஹஜ்ஜின் மூன்றாம் நாள் = 3 [ அதாவது ]
துல் ஹஜ் பிறை = 10 <> [ முஜ்தலிஃபா ]
> முஜ்தலிஃபாவில் இன்று ஃபஜர்
சாதிக் அதிகாலையிலிருந்து சூரியன்
உதிக்கும் வரை தங்குதல் .
> முஜ்தலிஃபாவில் இன்று ஃபஜர் தொழுகை நிறை வேற்றுதல் .
> சூரியன் உதித்ததற்க்கு பின் மினாவிற்க்கு புறப்படுதல் .
> மினாவில் இன்று சூரியன் உதித்த நேரத்திலிருந்து சூரியன் நடு உச்சி அடையும் நேரம் வரை பெரிய ஷைத்தானுக்கு [ மட்டும் ] கல் எறிதல் .
> குர்பானி கொடுத்தல் .
> தலைமுடி இறக்குதல் / குறைத்தல் .
> இஹ்ராம் உடைய உடைகளை நீக்கிவிட்டு தினசரி ஆடைகளை அணிந்துக் கொள்ளுதல் .
> தவாபே ஜியாரத் செய்தல் .
> ஸஃயீ செய்தல்
> இரவு மினாவில் தங்குதல் .
ஹஜ்ஜின் நான்காம் நாள் = 4
[ அதாவது ] துல் ஹஜ் பிறை = 11
> [ நேற்றைய தினம் செய்யாமல் இருந்தால் இன்று ]
> தவாபே ஜியாரத் செயிதல் .
> மினாவில் சூரியன் நடு உச்சி அடைந்த நேரம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை மூன்று ஷைத்தானுகளுக்கும் கல் எறிதல் .
> முதலில் சின்ன ஷைத்தானுக்கு கல் எறிதல் .
> பின்னர் நடு ஷைத்தானுக்கு கல் எறிதல்.பிறகு பெரிய ஷைத்தானுக்கு கல் எறிதல்
> இரவு மினாவில் தங்குதல்
ஹஜ்ஜின் ஐந்தாம் நாள் = 5
[ அதாவது ] துல் ஹஜ் பிறை = 12
> [ நேற்றைய தினம் செய்யாமல் இருந்தால் இன்று ] தவாபே ஜியாரத் செய்தல்
> மினாவில் சூரியன் நடு உச்சி
ஸ்டைந்த நேர முதல் சூரியன் மறையும்
நேரம் வரை மூன்று ஷைத்தாங்களுக்கும் கல் எறிதல் .
> பின்னர் நடு ஷைத்தானுக்கு கல் எறிதல் .
> பின்னர் பெரிய ஷைத்தானுக்கு கல் எறிதல் .
> மஃகரிபிற்கு முன் மக்காவிற்க்கு புறப்படுதல் .ஊரு திரும்பும் முன் தவாபே விதா [ விடைபெறும் தவாப் ] செய்தல் .
குறிப்பு :
மஃகரிபிற்கு பின்னும் ஒருவர் மினாவில் தங்கிவிட்டால் பிறை 13 அன்றும் சூரியன் நடு உச்சியை அடைந்த நேரம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை மூன்று ஷைத்தான்களுக்கும் கல் எறிய வேண்டும் .
உம்ரா :
நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் கூறினார்கள் : ஒர் உம்ரா செய்வது மறு உம்ரா வரை [ ஏற்படும் சிறு ] பாவங்களுக்குப் பரிகாரமாகும்
[ அறிவிப்பாளர் = அபூஹூரைரா [ ரலியல்லாஹூ அன்]ஹூ ] [ நூல் = புகாரி = 1773 ]
உம்ரா :
உம்ரா விற்க்கான இஹ்ராம் கட்டுதல் [ஷர்த்து ] தவாஃப் செய்தல் [ ரமலுடன் ]ருக்ன் ] ஸஃயீ செய்தல் [ வாஜிப் ] தலைமுடி இறக்குதல் / குறைத்தல் [ வாஜிப் ]
ஹஜ் இஃப்ராது :
இஹ்ராம் கட்டுதல் [ ஷர்த்து ] , தவாபே குதூம் செய்தல் [ சுன்னத் ] .மினாவில் தங்குதல் [ சுன்னத் ] அரஃபாவில் தங்குதல் [ருகன் ] முஜ்தலிஃபாவில் தங்குதல் [ வாஜிப்] பெரிய ஷைத்தானுக்கு [ மட்டும் ] கல் எறிதல் [ வாஜிப் ] , விரும்பினால் குர்பானி கொடுத்தல் தலைமுடி இறக்குதல் / குறைத்தல் [ வாஜிப் ] தவாபே ஜியாரத் செய்தல் [ ருக்ன் ] ஸஃயீ செய்தல் [ வாஜிப்]மூன்று ஷைத்தான் களுக்கும் கல் எறிதல் [வாஜிப் ] விடை பெறும் தவாப் செய்தல் [ வாஜிப் ]
ஹஜ் கிரான் :
ஹஜ் மற்றும் உம்ரா விற்க்கான இஹ்ராம் கட்டுதல் [ ஷர்த்து ] உம்ராவிற்க்கான தவாப் செய்தல் [ ரமலுடன் ] [ ருக்ன் ] உம்ராவிற்க்கான ஸஃயீ செய்தல் [ வாஜிப் ] தவாபே குதூம்செய்தல் [ ரமலுடன் ] [சுன்னத் ] ஹஜ்ஜிற்க்கான ஸஃயீ செய்தல் [வாஜிப் ] மினாவிலும் ,அரஃபாவிலும் தங்குதல் [ ருக்ன் ] முஜ்தலிஃபா வில் தங்குதல் [ வாஜிப் ] பெரிய ஷைத்தானுக்கு [மட்டும் ] கல் எறிதல் [ வாஜிப் ] குர்பானி கொடுத்தல் [ வாஜிப் ] தலை முடி இறக்குதல் / குறைத்தல் [ வாஜிப் ] தவாபே ஜியாரத் செய்தல் [ ருக்ன் ] மூன்று ஷைத்தாங்களுக்கும் கல் எறிதல் [ வாஜிப் ] விடை பெறும் தவாப் செய்தல் [ வாஜிப் ]
ஹஜ் தமத்துஃ :
உம்ராவிற்க்கான இஹ்ராம் கட்டுதல் [ஷர்த்து ] உம்ரா விற்க்கான தவாபே செய்தல் [ ரமலுடன் ] [ ருக்ன் ] உம்ராவிற்க்கன ஸஃயீ செய்தல் [ வாஜிப் ] தலை முடி இறக்குதல் / குறைத்தல் [ வாஜிப்] துல் ஹஜ் பிறை 8ம் நாள் ஹஜ்ஜிற்க்கான இஹ்ராம் கட்டுதல் [ ஷர்த்து ] மினாவில் தங்குதல் [ சுன்னத் ] அரஃபாவில் தங்குதல் [ருக்ன் ] முஜ்தலிஃபாவில் தங்குதல் [சுன்னத் ] பெரிய ஷைத்தானுக்கு [ மட்டும் ] கல் எறிதல் [ வாஜிப் ] குர்பானி கொடுத்தல் [ வாஜிப் ] ஹஜ்ஜிற்க்கான ஸஃயீ செய்தல் [வாஜிப் ] மூன்று ஷைத்தானுக்க்ளுக்கும் கல் எறிதல் [ வாஜிப் ] விடை பெறும் தவாப் செய்தல் [ வாஜிப் ]
ஹஜ்ஜூம் மற்றும் உம்ராவும் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக !!! ஆமீன் ஆமீன் ஆமீன் !!!
Comments
Post a Comment