50 GB of Internet Data Without any Recharge
50 GB of Internet Data Without any Recharge என்று உங்களுக்கு வரும் இதுபோன்ற Message பற்றிய உண்மை.. கண்டிப்பாக படித்து அறிந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்
இவ்வாறு 50 GB Data இலவசம் என்று Message வந்தவுடன் நாம் என்ன செய்கின்றோம்....! முந்தி அடித்துக் கொண்டு அதிலுள்ள Linkஐ அழுத்தி உடனே குறித்த இணையத்துக்குள் நமது தொலைபேசியில் உள்ள Browser மூலமாக உள் நுளைகின்றோம்.... ஆம் அந்த இடத்தில்தான் நாம் முதலாவது தவறை செய்கின்றோம்....
ஏன் என்ற உங்களுடைய கேள்விக்கு முழுமையான பதிலினை ஒரு கணினி தொழிநுட்பவியலாளனாக எனது சமூகத்துக்கு கூறி புரிய வைக்க வேண்டிய கடமையின்பால் இந்த பதிவை எழுதுகின்றேன் இறுதிவரை படிக்க தவறாதீர்கள் ஏன் என்றால் இது உங்களுடைய சொந்த தகவல்களையும், புகைப் படங்களையும், வீடியோக்களையும் யாரோ இனம் தெரியாத Hacker இணைய வளி திருடர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டிய நிலையில் நீங்கள் உள்ளீர்கள்
இவ்வாறான போலி செய்திகளை கணினி துறையில் நிபுணத்துவம் உள்ள சொந்த லாபத்துக்காக எதையும் செய்யக் கூடிய கீழ்தரமான தொழிநுட்பவியலாளர்கள் தயாரிக்கின்றனர். இவ்வாறு உண்மையிலே இலவசமாக Data தருவதாக கூறி போலி இணையங்களை உருவாக்கி அந்த இணைய லிங்களை வட்சப்பில் பரவலாக Share செய்து மக்களை அந்த இணையத்தளத்தை பார்வையிட வைத்து இலவச Data ஐ பெற இந்த தகவலை 12 குழுக்களில் Share செய்ய வேண்டும் என்று போலியான நிபந்தனைகள் சொல்லி மக்களை சூழ்ச்சிகரமாக Whatsapp இல் இவ்வாறான செய்திகளை Share செய்ய வைக்கின்றனர்.....
நமது மக்களும் இவ்வாறான போலி தகவல்களை share செய்து இந்த வட்டத்துக்குள் அவர்களுடைய நண்பர்கள் உறவினர்களையும் உள்வாங்கி அவர்களையும் இந்த போலி இணையங்களை பார்க்க வைத்து இந்த வட்டத்துக்குள் அவர்களையும் இழுக்கின்றனர். பொதுவாக ஒரே நாளில் மில்லியன் கணக்கில் இந்த போலி இணையத்தின் Link வட்சப்பில் பலரால் Share செய்யப்படுகின்றது..
இவ்வாறான போலி இணையங்கை நீங்கள் Open செய்தவுடன் அவை உங்கள் Web browser இல் உள்ள Coockies, Cache மெமரிகளை தானாக Hack செய்து உங்கள் E-Mail, Phone number போன்றவற்றை களவாடி Hackers களுடைய தரவுத் தளத்தில் சேகரிக்கின்றது.... (உங்களுடைய Browser இன் Cache பகுதியில்தான் உங்கள் தரவுகள் E-Mail, Password, Credit Card போன்ற தரவுகள் சேகரிக்கப்படுகின்றது)
பின்னர் சிறிய காலத்தின் பின்னர் உங்கள் மின்னஞ்சலுக்கு அல்லது தொலைபேசிக்கு இந்த Appஐ install பண்ணினால் இலவச அழைப்பு நேரம், இலவச டேட்டா என்று எல்லாம் Message வரும் நீங்களும் இலவசம் தானே என்று நம்பி Hackers களால் அனுப்பப்படும் குறித்த App களை Install செய்வீர்கள் பின்னர் அவை போலி என தெரிந்ததும் Uninstall செய்து விடுவீர்கள் ஆனால் குறித்த Appகளில் உங்களால் ஊகித்து பார்க்க முடியாத அளவுக்கு உங்ளுடைய தரவுகளை திருடும் Hacking Malware கள் இருக்கும் நீங்கள் குறித்த Appகளை Uninstall செய்தாலும் அவை உங்கள் தொலைபேசியில் நீங்கள் பார்க்க முடியாதபடி Hide ஆகி இருக்கும் அவை நாளுக்கு நாள் உங்கள் தொலைபேசியில் உள்ள தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை குறித்த Appஐ உருவாகிய Hacker களுக்கு உங்களுக்கு தெரியாமலே அனுப்பிக்கொண்டே இருக்கும்.
அவர்கள் அதில் இருந்து Hack செய்து பெற்ற உங்கள் புகைப்டம், வீடியோ போன்றவற்றை தவறான இணையங்களில் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கின்றனர்.. மேலும் உங்கள் தொலைபேசியில் இருந்து திருடிய Credit card, Shoping Card களை பயன்படுத்து உங்கள் வங்கியிலுள்ள பணத்து Dark Web இல் முகம் தெரியாமல் Transection செய்து பணமாக்கி செல்கின்றனர்...
உங்கள் தொலைபேசியில் இருந்து சேகரித்த உங்கள் உறவினர் காதலி மனைவி அம்மா அக்கா தங்கைகளுடைய தொலைபேசி இலக்கங்களை Dark web இல் ஏலம் விடுகின்றனர்....
மேலும் உங்கள் தொலைபேசியில் உள்ள ஆபாச படங்களையும் ஆபாச இணையத்தளங்களுக்கு பேரம் பேசி விற்கின்றனர்...
இதனால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தோர் அதிகம்... தயவு செய்து இது போன்ற இலவசம் என்று கூறி வரும் Linkகளை Click செய்து பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம்... இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்...
Comments
Post a Comment