லைலத்துல் கதர்

 லைலத்துல் கதர் என்பது  ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு ..!!

புனிதமிக்க லைலதுல் கதர் இரவு எம் சமூகத்துக்கு அல்லாஹ் அளித்த மாபெரும் ரஹ்மத்தாகும். ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு என்றால் எத்தனை பாக்கியம் அன்பர்களே! 

ஒரு நாள் இரவு நல் அமல்களில் ஈடுபடுவதால் ஆயிரம் மாதங்கள் அமல் செய்த பேற்றை அடைந்து கொள்கின்றோமே அதற்காகவே காலம் முழுக்க நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கின்றோம்.

இந்த இரவில் அளவுக்கதிகமான ரஹ்மத்தை அல்லாஹ் இந்த பூமியில் இறக்குகின்றான், மலக்குகள் இறங்குகின்றார்கள், முஃமீன்களுக்கு ஸலாம் உரைக்கின்றார்கள், நல் அமல்கள் செய்வோருக்காக பிழை பொறுக்கத் தேடுகின்றார்கள். 

இந்த மகத்தான இரவையும் தவரவிடக்கூடியவர்கள் எம்மிலும் எத்தனையோர் பேர் இருக்கத்தானே செய்கிறார்கள்.

عن ابن عباس عن النبي صلي الله عليه والسلام أنه من 

صلي في ليلة القدر ركعتين يقرأ في كل ركعة بفاتحة 

الكتاب مرة والاخلاص سبع مرات فاذا سلم يقول '' 

استغفر الله واتوب اليه سبعين مرة ؛ فلا يقوم من مقامه 

حتي يغفر الله له ولأبويه ، ويبعث الله تعالي ملائكة الي 
الجنان يغرسون له الأشجار و يبنون القصور ويجرون 

الأنهار ، ولا يخرج من الدنيا حتي يري ذلك كله.

 ( تفسير الحنفي )

நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 
யார் லைலதுல் கதிர்  இரவில் இரண்டு ரக் அத்துக்கள் தொழுது ஒவ்வொரு ரக் அத்திலும் சூரத்துல் பாத்திஹா ஒரு ( 1 )  தடவையும், சூரத்துல் இக்லாஸ் (குல்ஹுவல்லாஹு) ஏழு  (  7  ) தடவையும் யார் ஓதி சலாம் கொடுத்து

 பின்னர் எழுபது  (  70  ) தடவைகள் استغفر الله واتوب اليه (அஸ்தஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி) என்று ஒதுகிராரோ அவர் அந்த இடத்தை விட்டு எழும்பும் முன்னர் அவரது பாவங்களும் அவரது பெற்றோரது பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும். இன்னும் அவருக்காக சுவனத்திலே மரங்களை நட்டவும், மாளிகைகளை கட்டவும், ஆறுகளை உருவாக்கவும் அல்லாஹ் மலக்குகளை சுவனபதிகளுக்கு அனுப்புகிறான். இன்னும் அவற்றை காட்டப்படாமல்  அவர் மரணிக்கமாட்டார். 

அறிவிப்பாளர்  -  இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ 

ஆதார நூல்   =   தப்சீர் ஹனபீ

லைலத்துல் கதிர் உடைய இரவை அடைய செய்து அந்த இரவு முழுவதும் இபாத்த் செய்யக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் தருவானாக 

ஆமீன் ஆமீன் ஆமீன்

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்